தலைப்பு

சனி, 30 அக்டோபர், 2021

பிறரை அவமானப்படுத்தினால் பக்கத்தில் கூட வரமாட்டார் பாபா என புரிந்து கொண்ட பீட்டர்!

சுவாமி நூலாசிரியர் மர்ஃபெட் புட்டபர்த்தியில் பீட்டர் என்ற சுவாமி பக்தரை எதிர்பாராவிதமாக சந்திக்கிறார்.. அதில் பீட்டர் சொன்ன அனுபவமும்.. பகிர்ந்து கொண்ட ஞானமும் மர்ஃபெட்'டுக்கு மட்டுமில்லை நம் அனைவருக்குமே ஆத்ம ஞானம் ஏற்படுத்தும் மிக முக்கிய பதிவு... சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 28 அக்டோபர், 2021

கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர் ரேயஸ் மனைவிக்கு இயேசுவாக காட்சியளித்த சுவாமி!


ஒரு ஆராய்ச்சியாளரை திக்குமுக்காட வைத்து... அவருக்கு தன் மகிமை உணரச் செய்து... தன் மடியில் இழுத்து அமர்த்தி அனுகிரகம் புரிவதில் சுவாமிக்கு நிகர் சுவாமியே... சூழ்நிலை சிருஷ்டி கர்த்தா சுவாமி என்பதற்கான சிறந்த உதாரணமும் அடங்கி இருக்கிறது மிக சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 25 அக்டோபர், 2021

நடுநிசியில் தன்னந்தனியாக ஸ்வீடன் நாட்டில் வெப்பம் கொப்பளிக்கும் தனி அறையில் மாட்டிக் கொண்ட பக்தை!

யாருமே இல்லாத ஒரு தனிமையில்... உயிரே போகின்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்? கத்தி அழைத்தாலும் உதவி செய்ய யாருமே இல்லாத கொடும் சூழலில் ஒரு சுவாமி பக்தை மாட்டிக் கொள்கிறார்... அந்த உள் கதறல் சுவாமியின் காதுகளில் விழுந்ததா? எப்படி அந்த பக்தையை மீட்டார்? சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 21 அக்டோபர், 2021

சுவாமியின் லீலைகளை நேரில் கண்டு விடையறியாமல் திணறிய இரண்டு விஞ்ஞானிகள்!

விஞ்ஞானத்திற்கு எதுவுமே ஆராய்ச்சிக்கு உட்பட்டது தான்...விஞ்ஞானிகள் காற்றையே பரிசோதிப்பவர்கள்... அப்படிப்பட்ட இரண்டு மனோ தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மெய்ஞான சுவாமியை அணு அணுவாய் ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள்.... பிறகு என்னென்ன சுவாரஸ்யம் நிகழ்கிறது...இதோ...!

Man of Miracle புத்தக ஆசிரியர் ஹோவர்ட் மர்ஃபெட்'டுக்கு மூன்றடி வெள்ளைப் பாம்போடு தரிசனம் தந்த சுவாமி!

சுவாமியின் மகிமையை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர் ஹோவர்ட் மர்ஃபெட். அவரது Man of Miracle புத்தகமே பல வெளிநாட்டவர்களுக்கு சுவாமியின் தெய்வீகத்தை உணர்த்த பெரிய வாசல் திறந்து விட்டது! சுவாமி Man இல்லை God என அணு அணுவாய் உணர்ந்து கொண்ட அவரது பிரத்யேக ஆச்சர்ய அனுபவங்கள் இதோ...

புதன், 20 அக்டோபர், 2021

குடிசையில் வாழ்ந்த ஒரு ஏழைக் கிழவியை வாய் பேச வைத்த பரம பவித்ர விபூதி!


அணு அணுவாய் சுவாமியை துறவிகளும் மகான்களும் உணர்ந்து அனுபவிப்பதை போல் மனிதர்கள் உணர்ந்திருக்க அதிக வாய்ப்பில்லை... அப்படி அனுபவித்து உணர்ந்த தூயத்துறவி சுவாமிஜி காருண்யானந்தாவின் அதி அற்புதமான சுவாமி அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...

நான் உங்கள் சத்யா அல்ல நான் சாயிபாபா!


1940 ம் ஆண்டு, சாயி அவதாரத்தின் ஒரு மைல் கல் . இந்த ஆண்டுதான் சத்யா, தாம் சாயிபாபா என்பதைத் தொடர் நிகழ்வுகள் பல நிகழ்த்தி, அக்டோபர் 20ம் அதை உலகிற்கு அறிவித்தார். இந்நாள் உலகின் சரித்திரத்தில் ஒரு பொன் நாளாக, சாயி பக்தர்களின் திருநாளாக பொலிகிறது. பதிவின் சில நிகழ்வுகள், சத்யம் சிவம், சுந்தரம்( தமிழ்) புத்தகத்தில் உள்ள நிகழுவுகளின் ஆதாரத்தோடு பகிரப்படுகிறது.

திங்கள், 18 அக்டோபர், 2021

சுவாமியிடம் கொண்டுவரப்பட்ட அதிசய விபூதிக் குழந்தை!

அனிச்சை செயலாய் உடலெங்கும் விபூதி கொட்டிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? திகிலாகவும்.. அமானுஷ்யமானகவும் இருக்கும் அல்லவா!! ஏன் ? எதனால்? அதுவும் ஒரு குழந்தைக்கு...அந்த அதிசய விபூதிக் குழந்தை சுவாமியிடம் கொண்டு வரப்படுகிறது.. என்ன நேர்கிறது என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம்... 

சனி, 16 அக்டோபர், 2021

பக்தர்களின் வாழ்க்கைக் கப்பலை கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டி கரை சேர்க்கும் சுவாமி!


சுவாமி தன் பக்தர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான நகர்வுகளிலும் எவ்வாறு வழிகாட்டி.. பாதையை தெளிவாக்கி.. அணுகுமுறையை இலகுவாக்கி முன்னேறுவதற்கு மூச்சாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் மிக சுவாரஸ்யமாய் இதோ... ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் அல்லவா!! 

வெள்ளி, 15 அக்டோபர், 2021

பாபா வரவழைத்த ஷீரடி பிரசாதம்... கொடுக்கக் கொடுக்க குறையாமல் கூடையில் நிறைந்த அற்புதம்!

ஸ்ரீ சத்யசாயியின்  திவ்ய கரங்களின் மகிமை, வானத்தின் வீச்சை விடவும், கடலின் ஆழத்தை விடவும் பெரியது. "பஸ்மோத்பவ கர பவபய நாசன" என்ற பஜன் வரிகள் காதில் ஒலிக்கின்றன அல்லவா. அவர் கரம் பட்டால், சாதாரண பாத்திரம்கூட அட்சய பாத்திரமாக மாறிவிடுகிறது...

வியாழன், 14 அக்டோபர், 2021

அணு விஞ்ஞானியாக இருந்தவரை வீணை வித்வானாக மாற்றிய ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதி!

தற்கொலை செய்து கொள்ள இருந்த ஒரு அணு ஆராய்ச்சியாளரை சுவாமி எவ்வாறு இசையால் தடுத்தாட் கொண்டார் எனும் தனிப்பெரும் அனுபவம்.. சுவாமியால் மட்டுமே அருள் புரிய கூடிய இந்த பிரத்யேக அனுபவம் மிக சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 11 அக்டோபர், 2021

விளாங்காயை நிலவாக மாற்றிய பாபாவின் வினோத லீலை!


நிலவே நிலவே வா வா என்று அன்னையர்கள் நிலவை அழைத்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவர். நாம் அழைத்தால் விண் நிலவு மண்ணுக்கு வருமா.? ஆனால் அழைக்காமலே வந்து பாபாவின் கையில் அடைக்கலமானது நிலவு . நம்ப இயலவில்லையா? பதிவுக்குள் செல்வம். படித்தபின் தெளிவோம்... 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சுற்றி எரியும் நெருப்புக்கு மத்தியில் சலனமின்றி நிகழ்ந்த சாயி தியானம்!

பல்வேறு வகையான சுவாமி அனுபவம் விதவிதமாய் பல்வேறு சூழ்நிலையில் பலதரப்பட்ட பக்தர்க்கு நிகழ்ந்திருக்கிறது.. அதில் மூன்று சுவாரஸ்ய சுவாமி அனுபவங்களை அனுபவிக்கப் போகிறோம் இதோ... நமக்கு நிகழும் அனுபவம் போல் பிறர்க்கு நிகழும் அனுபவமும் நம்மை சுத்தீகரிக்கும் நெருப்புக்கு சமமே!

ஸ்ரீ சத்ய சாயி பாபா பெயர் தாங்கும் மெட்ரோ ரயில் நிறுத்தம்!

உலக தரம் வாய்ந்த மருத்துவமனையின் மூலமாக, கர்நாடக மக்களின் மேல் பகவான் பாபா செலுத்தும் பேரன்பு மற்றும் கருணையை போற்றும் வகையில், அம்மாநில அரசு தனது அரசிதழின் வாயிலாக (கன்னட மொழியில்), சத்ய சாயி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் 'சதாரமங்கல' மெட்ரோ ரயில் நிறுத்தத்திற்கு "ஸ்ரீ சத்ய சாயி ஹாஸ்பிடல் மெட்ரோ நிறுத்தம்" - "Sri Sathya Sai Hospital metro station" என பெயர் மாற்றம் செய்துள்ளது. 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

தனது ஒரே மகன் இறந்த போதும் சுவாமி மேல் பிடிமானம் இழக்காத பெரும்பக்தை திருமதி ராமகிருஷ்ணா!

எத்தனையோ பக்தர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற திடீர் மாற்றங்கள்... ஏமாற்றங்கள்.. பேரிழப்புகள்... பெரும் நஷ்டங்கள் இவற்றின் இடிப் பொழுதுகளிலும் சுவாமி மேல் இம்மி அளவிலும் பக்தி இழக்காத தூயவர்களின் திடமான தருணங்கள்  சுவாரஸ்யமாய் இதோ...

🇮🇹 இத்தாலிய நாட்டின் முன்னாள் பிரதமா் பெட்டினோ கிராக்ஸியின் புட்டபர்த்தி விஜயம்.


🌼 நான் எனது ஆன்மிக தலைவரை சந்தித்து அவரது ஆசிகளை பெறுவதற்காக வந்திருக்கிறேன் இத்தாலிய நாட்டின் பிரதமா் பெட்டினோ கிராக்ஸி... 

வியாழன், 7 அக்டோபர், 2021

உங்கள் வாழ்நாளின் பெரிய பொக்கிஷம் - பிரசாந்தி சேவை!


பிரசாந்தி நிலையத்தின் ஒவ்வொரு மணல்துகளும், புனிதமானது.  பூலோக கைலாசமாக, புனித வைகுண்டமாக, மேலான மெக்காவாக,கருணையான ஜெரூசலமாக, கனிவான கயாவாக, கங்கை, காசி, பத்ரியாக, எதை நினைக்கினும் அதுவாகவே ஆகிடும் அற்புத ஸ்தலம், சர்வ தேவதா அதீத ஸ்வரூப சச்சிதானந்த பர்த்திவாசன் வாழும் திவ்ய பூமி, , பிரசாந்தி நிலையம் ஆகும்.பிரசாந்தி சேவைகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஈடுபட்ட பம்பாய் ஸ்ரீநிவாசன் அவர்களின் அனுபவங்களைப் பார்ப்போம்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

ரோடாமேவின் மார்பக புற்றுநோயை குணமாக்கிய ஸ்ரீ சத்யசாயி விபூதி!

எதன் மேலும் நம்பிக்கையே இல்லாத ஒரு ஆங்கிலேயப் பெண்மணியின் மார்பக புற்றுநோயை Man of Miracles புத்தக ஆசிரியர் மரஃபெட் அவர்களின் மனைவியை கருவியாக பயன்படுத்தி சுவாமி எவ்வாறு குணமாக்கினார் எனும் சுவாரஸ்ய அனுபவப் பதிவு இது.. இதில் சுவாமியை பூரணமாய் உணர்ந்த மர்ஃபெட்டின் நூதன சுவாமி அனுபவமும் இடம்பெறுகிறது இதோ...

வெள்ளி, 1 அக்டோபர், 2021

அதிநவீன இதயம் சார்ந்த நோய் தடுப்பு / உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

பகவானின் தெய்வீக சங்கல்பத்தால், இன்று காலை (14.10.2021) இதய நோயின் போது உயிர் காக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று மக்களின் பயன்பாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது. ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. R. J. ரத்னாகர், பிரசாந்தி நிலைய சத்ய சாயி அதிநவீன மருத்துவமனை இயக்குனர் Dr. குருமூர்த்தி மற்றும் சத்ய சாயி பொது மருத்துவமனை இயக்குனர் Dr. நரசிம்மன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.