(விஞ்ஞானத்தை மெய்ஞானம் வெல்லும் என்பதை வலியுறுத்தும் வகையில் பாபா செய்த அற்புத லீலை!)
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக நிலவியல் துறை தலைவர் மற்றும் பிரபல ஆராய்ச்சியாளருமான DR. Y. J ராவ் ஒருமுறை பகவான் சத்ய சாய்பாபாவை சந்தித்தார்.
அவர் கையில் கல் ஒன்று இருந்தது. பாபா அந்த கல்லை பார்த்து "அதில் என்ன இருக்கிறது" என்றார்.
உடனே ராவ் சில தாதுக்களின் பெயரை சொன்னார்.
'அதில்லை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால்'... என்றார்.
அதற்கு ராவ் 'மூலக்கூறுகள் அணுக்கள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், இன்னும்".... என்று இழுத்தார்.
பாபா 'அதில்லை இன்னும் ஆழமாக பாருங்கள்' என்றார்.
பாபா கல்லினை வாங்கி மெதுவாக ஊதினார். ராவ் கண் இமைக்காமல் பார்த்தார். கல் வேறு மாதிரி மாற ஆரம்பித்தது. இறுதியில் "குழலூதும் கண்ணனாக" கல் மாறியது.
ராவின் கண்கள் இமைக்க வில்லை. "பார்த்தீர்களா உங்கள் ஆய்வையும் தாண்டி அங்கே ஆண்டவன் இருக்கிறான். அந்த கல்லில் கண்ட கண்ணனின் பாதத்தை பிட்டு சுவைக்கும்படி பாபா சொன்னவுடன்" ராவ் திட்டு சுவைத்தார்.
என்ன ஆச்சர்யம்!!
கல் கல்கண்டாய் இனித்தது.
பகவான் சத்யசாய்பாபா ஒரு சமூக விஞ்ஞானி, அவர் மக்களை அன்பால் இணைக்க வேண்டும் என்று விரும்பினார். பண்பால் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் பக்தர்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம் ஓடிச் சென்று உதவினார்.
Reference: “Sai Baba: Man of Miracles” by Mr. Howard Murphet. Page: 156 (Paperback Edition, 1972). Published by Macmillan India Ltd.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக