தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

முடி அரசரின் முடிவில்லா விளையாட்டு!


தன்னை நாடியோரை மட்டும் பாபா பண்படுத்தவில்லை.... கடவுளை நிந்தித்தவரை கூட அவர் பண்படுத்தி இருக்கிறார். அதுதான் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கருணை!

ஒருமுறை புட்டபர்த்தியில் பாபாவின் தரிசனத்தின் போது கடவுள் மறுப்பு கொள்கை உடைய ஓர் இளைஞன், தன் தாயின் வற்புறுத்தலின் பேரில் வந்திருந்தான். வந்தவன் பாபாவை பற்றி மிகவும் தாழ்வாகவும், குறிப்பாக பாபாவின் தலைமுடியைப் பற்றி கேலியாக அருகில் இருந்தவர்களிடம்
முணுமுணுத்தவாறு பேசிக்கொண்டிருந்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த அன்பர்கள் கண்டித்தும் கூட அவன் தன் விமர்சனத்தை நிறுத்தவில்லை.



அனைத்தும் அறிந்த பாபா புன்னகைத்தவாறு தன் உதவியாளரை அழைத்து அந்த இளைஞனின் கையில் ஒரு கத்தரிக்கோலை கொடுத்து தன்னிடம் அனுப்புமாறு அறிவுறுத்தினார். உதவியாளருக்கு பாபாவின் கூற்று விளங்காது இருந்தது. இருப்பினும் அந்த இளைஞனிடம் கத்திரிக்கோலை கொடுத்து அனுப்பினார்.
  
அருகே வந்த இளைஞனிடம் அந்த கத்தரிக்கோலின் பயன் என்ன? என்று கேட்டார். 'வெட்டுவது' என்றான்.

பாபா விடவில்லை 'எதை வெட்டுவது' என்றார்.

இளைஞன் முகத்தில் சற்று கோபம்..

சற்று உஷ்ணத்துடன் 'துணி' 'பேப்பர்' இன்னும்... என்று இழுத்தான்.

பாபா 'வேறு எதை வெட்டலாம்'?என்றார்.

கோபமடைந்த இளைஞன் 'தலைமுடியை கூட' வெட்டலாம் என்றான்.

'அப்படியா? எங்கே என் முடியை இந்த கத்தரிக்கோலால் வெட்டு பார்க்கலாம்' என்றார்...

இளைஞனும் சளைக்கவில்லை. கத்தரிக்கோலினை பாபாவின் அடர்ந்த முடியினூடே விட்டு வெட்ட முயலும்போது ஷாக் அடித்தது போன்று உணர்ந்ததால் அதிர்ச்சியில் கத்தரிக்கோலை கீழே போட்டான்..
பாபாவின் மகிமையை உணராமல் தான் செய்த செயலை நினைத்து அந்த இளைஞன் வெட்கி தலை குனிந்தான்.

பிறகென்ன பாபாவின் காலடியில் சேவகம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இப்படி பாபா தன் அன்பால் கட்டிப்போட்ட அன்பர்கள் ஏராளம்...

ஆதாரம்: Bhagawan Sri Sathya Saibaba Satcharitram" , Page-80

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக