தலைப்பு

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் ஆழத்தினை நீங்கள் அறிவீர்களா?


இறைவனுடைய அருளுடன் ஒருவனால் வாழ்வில் எதனையும் சாதித்திட இயலும். இறைவன் தரும் சோதனைகளை எதிர்கொண்டு, நீங்கள் இறைவனின் மீது முழுமையான நம்பிக்கையினை வைத்து, உங்கள் கடமையினை செய்து வந்தால், நிச்சியமாக நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் ஆழத்தினை நீங்கள் அறிவீர்களா? பெரும்பாலானோர் புட்டபர்த்திக்கு வந்து சிறிய குடிசைகளில் கூட வாழ்கின்றனர். அப்படியும் அவர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் உள்ளனர்.

அவர்கள் கொண்டுள்ள அசைக்க இயலாத நம்பிக்கையின் விளைவாக அவர்கள் பெற்றுள்ள ஆனந்தத்தினை எவராலும் விவரிக்க இயலாது. அத்தகு உறுதியான நம்பிக்கையினை நீங்கள் இறைவின் மீது கொண்டிருந்தால், அவர் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை பாதுகாத்துக் கொள்வார்.  

-பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா 

ஆதாரம்: சனாதன சாரதி : அக்டோபர் 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக