தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பாயாசத்தில் சத்யசாய் பாபாவின் தரிசனம்!


"சாயி  வாக்கு சத்ய வாக்கு"

அனந்தப்பூரில் உள்ள ஸ்வாமியின் கல்லூரியில் படித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாயிற்று. அவர், திருமண பத்திரிக்கையை ஸ்வாமியிடம்  கொடுத்து, தன் திருமணத்திற்கு வந்து ஆசிகள் அருள வேண்டும் என்றார்.
ஸ்வாமியும் தான் வருவதாக ஒப்புக் கொண்டார். திருமணம் நடைபெறும் இடம் புட்டபர்த்தியில் இருந்து 200 Km. அன்று மாங்கல்ய தாரணமும் இனிதே நடைப்பெற்றது . ஸ்வாமி வந்து ஆசீர்வாதம் செய்ய வில்லையே என்ற ஆதங்கம் மணப்பெண்ணிற்கு. ஸ்வாமி கட்டாயம் வருகிறேன் என்று சொன்னாரே என நினைத்து ஏங்கினாள். 

அப்போது சமையல் அறையில் சிறு சலசலப்புடன் சாய்ராம் , சாய்ராம் என்ற கோரஸ் ஒலி கேட்டது . எல்லோரும் கூட்டமாக அங்கு சென்றனர் . மணப்பெண்ணும் அங்கே சென்றார்.

அங்கு அவர் கண்ட காட்சி. கண்களிள் ஆணந்தக் கண்ணீர் பெருகியது. அப்படி என்ன தான் நடந்தது அங்கே? பாயசம் வைத்திருக்கும் அண்டாவில் ஸ்வாமியின் உருவம் தெறிந்தது.

 இதில் என்ன விசேஷம் என்றால், கடைசி ஸ்பூன் பாயசம் தீரும் வரையில் ஸ்வாமியின் திருஉருவம் அப்படியே இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் திவ்ய தரிசனம். 

சாய்ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக