பாபா அனைத்து உயிரினங்களையும் சமமான அளவிலேயே நேசிக்கிறார், மிருகங்களைக் கொல்லுதல் அல்லது வேட்டையாடுவதை அவர் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்.
ஒரு முறை புட்டபர்த்திக்கு அருகில் உள்ள அனந்தபூரில் மாவட்ட அதிகாரியாக இருந்த வெள்ளைக்காரர் ஒருவர் கிராம மக்கள் கூறியதன் பேரில் பாபவைக் காண அவரது பழைய மந்திருக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் வரும் வழியில் சித்ராவதி ஆற்று மணல் பரப்பில் அவரது ஜீப் நின்றுவிட்டது. எட்டு எருதுகள் ஒன்று சேர்ந்து கூட அந்த ஜீப்பை நகர்த்த இயலவில்லை! பாபாவின் உதவியைக் கோரும்படி கிராம மக்கள் அதிகாரிக்கு ஆலோசனை கூறினார்கள். அந்த அதிகாரியும் சித்திராவதி ஆற்றங்கரையிலிருந்து நடந்தே பழைய மந்திருக்கு சென்று பாபாவிடம் வேண்டினார். பாபா அவரிடன் பின்வருமாறு கூறினார் *‘நீ ஒரு புலியைக் கொன்று புலிக்குட்டிகளை அநாதை ஆக்கி விட்டு வந்துள்ளீர். பெங்களூர் மிருக காட்சி சாலையில் அவைகளுக்கு பாதுகாப்பு எற்பாடு செய்ய வேண்டும்'* எனக் கூறினார். உண்மையில் அந்த அதிகாரி வேட்டைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார் சுடப்பட்ட புலியின் உடல் வண்டியில் இருந்தது. எல்லாம் அறிந்த பாபாவின் பேரறிவை உணர்ந்த அதிகாரி, சுவாமியின் அறிவுரையைப் பணிந்து ஏற்று பின்னர் அதன்படியே செய்தார். நகராமல் நின்று கொண்டிருந்த ஜீப்பின் மீது தூவும் படி சுவாமி சிறிது விபூதி கொடுத்தார் அதை தூவியவுடன் ஜீப் நகர்ந்து சென்றது பிற்காலத்தில் அந்த அதிகாரி அப்புலியின் தோலை சுவாமிக்கு சமர்ப்பித்தார் சுவாமியும் கருணையுடன் ஏற்றுக்கொண்டார். இப்போதும் பிராசாந்தி நிலையத்தில் அப்புலியின் தோல் பரப்பில் தான் சுவாமியின் நாற்காலி அமைந்துள்ளது.
ஆதாரம்: (Narrated by Sri R Balapattabi in his book named, Nectarine Leelas)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக