தலைப்பு

வியாழன், 4 ஏப்ரல், 2019

என் பணியை நீ செய்தால் உன் வேலையை நான் பார்த்துக்கொள்வேன்.

என் பணியை நீ செய்தால் உன் வேலையை நான் பார்த்துக்கொள்வேன்!
~பகவான் பாபா

மும்பை சத்ய சாயி நிறுவன தத்து கிராமமான பைர்வாடி (Bhairwadi) கிராமத்தில் வசிக்கும் திரு. ஆகாஷ் அவர்கள், நிறுவன சேவைப் பணிகள் அந்த கிராமத்தில் நடைபெற 3 வருடங்களாக நிறுவனத்திற்கு உதவியாக இருப்பவர். 

ஆகாஷ் மற்ற கிராமதினருடன் மார்ச் 6ம் தேதி புட்டப்பர்த்திக்கு 'பிரசாந்தி சேவைக்கு' புறப்பட்டார். அவர் பிரசாந்தி நிலையத்தில் சேவை ஆற்றி கொண்டிருக்கும் சமயத்தில் 2019 மார்ச் 9ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மார்ச் 12ம் தேதி அக்குழந்தை உணவு மற்றும் பிற குறைப்பாடுகளால் நீரிழப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆட்படுகிறது.

மருத்துவர்கள் அக்குழந்தையை பூனேக்கு அழைத்து செல்ல கூறியபின், ஆகாஷின் மனைவி மற்றும் தாய் குழந்தையை பூனேயில் உள்ள ரத்னா மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை இப்போது ICUவில்.

இதனை கேள்விப்பட்ட நிறுவனத்தினர் ஆகாஷிற்கு உடனே தகவல் கூறி, பூனேக்கு உடனடியாக கிளம்பி வருமாறு கூறினர்.

அதிகாலை 3 மணி விமானத்தில் பயண சீட்டு எடுத்து, விமான நிலையம் வருவதற்கு டாக்ஸியும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் அவரை போனில் அழைத்தனர்.

அவர் வருத்த மிகுதியால் கண்கலங்கினார்.

பாதியில் சேவையை விட்டு வர விருப்பமில்லை என்பதை தெரிவித்தார், முழுமையான 7 நாள் சேவையை பூர்த்தி செய்ய விரும்பினார்.
                    
நிறுவனத்தினர், இந்நேரத்தில் ஆகாஷ் தன் குடும்பத்தினருடன் இருப்பதே உசிதம் என அறிவுறுத்தினர்.

ஆனால் அவர் மறுத்தார். தன் குழந்தை பூனேயில் ICUவில் தவிக்கும் அதே நேரத்தில் தான் இங்கு பகவானின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேவையாற்றுகிறேன், பகவான் தன் குழந்தையை பார்த்துக்கொள்வார் என தெரிவித்தார்.

பாபா, 'தனது பணியை நீ செய்தால் உனது வேலைகளை நான் கவனித்துக் கொள்வேன்' என கூறியதை ஆகாஷ் அவர்களிடம் நினைவு கூர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பகவானின் வாக்கினில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், பகவான் தனது குழந்தையை பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். அவர்களையும் நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

ஆச்சரியம், பகவானின் அருளால் அடுத்த 12 மணி நேரத்தில் குழந்தை சிகிச்சையின் பயனாக குணமடைய தொடங்கியது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டது குழந்தை.

வாழ்நாளில் பகவானை ஸ்தூலமாக, நேரில் காணாத ஒருவருக்கு இவை அனைத்தும் ஆச்சரியமாக தோன்றும். அதற்கு விடை 'அசைக்க முடியாத நம்பிக்கை'யே!

*'சாயியை நம்பினோர் கைவிடப்படார்'*

(ஆதாரம்: மும்பை சத்ய சாயி நிறுவனதார் பகிர்ந்த whatsapp செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக