திருமதி. சுசீலா அவர்கள் எவ்வாறு ஸ்வாமியால் காப்பாற்ற பட்டார் என்பதை பேராசிரியர் கஸ்தூரி அவர்களின் ஆனந்த பகிர்வு தங்களுக்காக…
திடீரென்று ஒரு சாய் சகோதரன் ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து, தான் சென்னை செல்வதாக கூறினார். அதற்கு ஸ்வாமி அவனிடம் *“உன் தாயாரை இனியாவது விளக்கு ஏற்றும்போது கவனமாக ஏற்றச் சொல்”* என்று ஸ்வாமி அன்பாக கூறினார்.
உணவு அருந்துமிடத்தில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஒரே ஆச்சரியம். பின்னர் ஸ்வாமி முழுக்கதையை தீர சொன்னார். சுசீலா அவர்கள் பூஜை அறையில் விளக்கு வைக்கும்போது அவருடைய புடவை தீப்பற்றி எரிந்தது. சாய்ராம்! என்று அழைத்தார். புட்டபர்த்தியில் இருந்து கொண்டே சுசீலாவின் உடலில் பட வேண்டிய தீக்காயத்தை தன் தேகத்தில் தாங்கியதாக கூறினார்.
பின்னர் புட்டபர்த்தி வந்த சுசீலா தனக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றி தெளிவாக சொன்னார். ஸ்வாமியிடம் சுசீலா மிகவும் அன்பாக வருத்தத்துடன் தங்கள் கையில் தீக்காயம் பட்டு இருக்குமே என்று வினவினார். அதற்கு ஸ்வாமி மிகவும் சத்தமாக சிரித்துக் கொண்டே, “எனக்கு ஒரு காயமும் இல்லை. என் உடலின் வெப்பநிலை திடீரென்று உயர்ந்து தாழ்ந்தது அவ்வளவுதான்” என்று கூறினார்.
சில வருடங்களுக்கு பின்பு கஸ்தூரி அவர்களுக்கு ஆனித்தரமாக இந்த சம்பவம் ஆதாரத்துடன் விளங்கியது. திரு.ஜி. வெங்கடமுனி, சுசிலாவின் கணவர் நடந்த சம்பவத்தை சொன்னார். சுசிலாவின் புடவை முழுவதும் கருகியும் கூட அவரின் உடலின் ஒரு தீக்காயம் கூட படாமல் காப்பாற்றினார் ஸ்வாமி. சுசீலா பக்தியுடன் ஆபத்தில் அழைத்தார். ஸ்வாமி உடனடியாக காப்பாற்றினார். ஸ்வாமியின் கைகளில் தீக்காயம் பட்டு இருக்குமோ என்ற கவலை சுசீலாவிற்கு மிக அதிகமாக இருந்தது. ஸ்வாமி, ஒரு தெய்வீக அவதாரம் அவருக்கு எப்போதும் ஒருபோதும் எக்காயமும் நிகழாது.
ஆதாரம்: "Sai Baba: Man of Miracles” by Mr. Howard Murphet. Page: 138-139
மொழிபெயர்ப்பு: திருமதி. சுதாதேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக