தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பகவான் வாக்கு பலிக்கும்!பகவானை துதிப்பதும் நிந்திப்பதும் பக்தர்களின் குணம் - அது மாதிரியான நிகழ்வு கூட உண்டு.. 
  
பாபாவின் பக்தர் ஒருவர் மைசூர் தனியார் பள்ளி ஒன்றில் பணியில் இருந்தார். நன்றாக இருந்த அவரது கண்களில் பார்வை பறிபோனது. கூடவே வேலையும் போனது.

" உன்னையே நினைத்து கொண்டிருந்த எனக்கு இந்த சோதனையை ஏன் தந்தாய்"?

 இதுதான் அந்த பக்தர் பாபாவிடம் கேட்க விரும்பிய கேள்வி..

அதை அறிந்த பாபா அவரது துணைவியாரை அருகில்  அழைத்து "அம்மா உன் கணவர், முற்பிறவியில் செய்த வினைக்காண பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறார். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல், ஒரு நல்ல தகவல் வரும் என்றார்."

அந்த அம்மையார் அதிர்ந்தார். பாபாவாலே முடியாதது  பின் எப்படி சரியாகும்? என்ன தகவல் வரும் என்றும் குழம்பினார்.
 வேறு வழியின்றி மைசூர் திரும்பினார்கள்.

 என்ன ஆச்சரியம்!
 அவரது கணவருக்கு அரசு பார்வையற்றோர் பள்ளியில் கூடுதல் சம்பளத்துடன் நியமன ஆணை வந்தது.

அதுதானே நல்ல தகவல். பகவான் வாக்கு பலிக்கும்..

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam (1986-2005)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக