தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

திரிபுர ரகசியம் என்றால் என்ன?


பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா சாதாரணமான அவதாரம் அல்ல, அனைத்து அவதாரங்களின் தலைமையானவரும் ஆதிமூலமானவரும் ஆவார்.
ஒரு பக்தர் உரைத்த நிகழ்ச்சி இதனைத் தெளிவுபடுத்தும். அது பின்வருமாறு: 

ஒரு பக்தர் பகவானிடம் ''ஸ்வாமி  திரிபுர ரகசியம் என்றால் என்ன?”  என்று கேட்டார். பகவான் புன்முறுவலோடு '' ஒரு கதை சொல்கிறேன், கேள் எனக் கூறினார். ஒருமுறை பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரு சந்தேகம் கொண்டனர். தற்போது மனிதர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தால், ஆசிரியரிடம் செல்வர்; மகரிஷிகளுக்குச் சந்தேகம் எழுந்தால், பிரம்மா,
விஷ்ணு, மகேஸ்வரனை அணுகுவர். ஆனால் மும்மூர்த்திகளுக்கே சந்தேகம் எழுந்தால் யாரை அணுகுவர்? அவர்களை சிருஷ்டித்த சக்தியாகிய திரிபுரா தேவியினை அணுகுவர். ஆனால் அச்சக்தியும் பணிவோடு கூறியது ''என்னிடமும் உங்கள் கேள்விக்கான பதில் இல்லை என்பதுதான்!  

“ஆனால், உங்கள் கேள்விக்கான பதிலை யார் அறிவார் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினாள் திரிபுரா தேவி.  ஆதலால், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றாள். அவ்விடத்தில் ஒரு பெரிய வாயிற்கதவினைக் கண்டனர். திரிபுரா தேவி அதனைத் திறக்கச் செய்தாள். பிறகு அங்கு ஓர் நீண்ட, பரந்த கூடத்தினைக் கண்டனர். 

சுவாமி மேலே கூறினார், "அக்கூடத்தின்  இருபக்கத்திலும் ஆயிரக்கணக்கான சிம்மாசனங்கள் இருந்தன. அச்சிம்மாசனங்களின் நான்கு கால்களும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் மற்றும் திரிபுரா தேவி ஆவர்."

தங்கள் மனதில் சந்தேகத்தைக் கொண்ட மும்மூர்த்திகளும், ஆயிரக்கணக்கான பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர்களையும் திரிபுரா தேவிகளையும்  கண்டு பிரமித்தனர். இவ்வனைவரும் யார்முன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்குகின்றனர் என்பதனை அறிய ஆர்வங்கொண்டனர். அக்கூடத்தின்  கடைசிப்பகுதியில், அவர்கள் மிகவும் அழகிய தாமரைபோன்ற பாதங்களைக் கண்டனர். மேலும் அம்மெய்மை யாரெனக் காணப் பார்வையை மேலுயர்த்தினர். அங்கே அவர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைக் கண்டனர்!

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இவ்வண்ட சராசரத்தின் அவதாரமாவார். அவரே ஆதிபுருஷர். அவரே தன்னைச் சக்தியாக சிருஷ்டித்தார். மேலும் அச்சக்தியே திரிபுரா தேவிகளாகவும் உருவெடுத்தன. இத் திரிபுரா தேவிகள்  ஒவ்வொருவரும் ஒவ்வோர் அண்டத்தை உருவாக்கினார்கள்.

இன்று அறிவியலில்கூடப் பால்வழி மண்டலங்கள் பல இருக்கக்கூடும் எனக் கண்டு உணர்ந்திருக்கின்றனர்.  பற்பல அண்டங்கள் உள்ளன. மேலும் ஆதிபுருஷரே ஆதிசக்தியைச் சிருஷ்டித்து, அந்தச் சக்தியின்மூலம் சிருஷ்டியைத் துவக்கச் செய்தார். இவ்வாறு பல அண்டங்கள் உருவாகச் சங்கல்பம் எடுத்த ஆதிபுருஷரே இவ்வண்ட சராசரத்திற்கே அவதாரமாகிய பிரம்மாண்ட நாயகனே அழகிய பூமியில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக அவதரித்துள்ளார்.

ஆதாரம்Experiencing Sai - Here and Now


மொழிபெயர்ப்பு :   அர்ச்சனா, விழுப்புரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக