தலைப்பு

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஓ சாயி! சரணடைந்தவரைக் காப்பவனே!


35. ஓம் ஸ்ரீ ஸாயி சரணாகத த்ராணாய நம

ஆகத – வந்த,
சரண் – சரணம்,
த்ராண – காப்பாற்றுபவர்

பக்தர் ஒருவர்! தனது வீட்டில் பகவானின் பஜனையை விடாது தினமும் நடத்தி வந்தார். அவருக்கு ஒருநாள் பயமுறுத்தல் கடிதம் ஒன்று வந்தது. பஜனையை நீ
நிறுத்திவிடு. நீ மக்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறாய். இந்த கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் நீ பஜனையை நிறுத்தாவிட்டால் உன் தலை சீவப்படும்! இது தான் அந்த கடிதத்தில் இருந்த விஷயம். பயப்படவில்லை அந்த பக்தர். “சரணாகதன் பாபா. அவர் என்னைக் காப்பார்” என்று தனது வீட்டு பஜனையை நிறுத்தாமல் இரவும் பகலுமாக செய்துகொண்டு வந்தார்! அவர்களுடைய பயமுறுத்தல்களை காக்கும் கவசம் பாபாவின் நாமம் தான் என்பதை அவர் நன்கு புரிந்துகொண்டு இருந்தார். ஏழு நாட்கள் முடிவுற்றது. நிற்காமல் பஜனையை நடத்தி வருகிறானே என்று கோபம் கொண்ட அந்த நக்ஸலைட் தனது முடிவை நிறைவேற்ற எட்டாம் நாள் விடியற்காலை மெதுவாக அந்த பக்தரின் வீட்டினுள் நுழைந்தான். அவரோ இறைவனை தொழுவதற்கு தயாராவதற்காக, குளியல் அறையில் அமைதியாக தனது முகத்தை கழுவிக் கொண்டிருந்தார். வெறுப்பு மேலோங்கி அந்த மனிதன் பக்தரை நோக்கி குறி பார்த்து கொடுவாளை வீசினான்! என்ன ஆயிற்று? சரணாகதன் பாபா அங்கு வந்துவிட்டார்! ஆம்! ஆரஞ்சு சிவப்பு நிறத்தோடு ஒரு சுழற்காற்று அவர் முன் தோன்றியது! ம்ருதுவான ஒரு கரம் அவரை அந்த அறையின் ஒரு மூலைக்கு பிடித்துத் தள்ளியது! அந்த கொலைகருவி கீழே விழும் ஓசையும் அந்த மனிதன் ஓடும் ஓசையும் கேட்டு பக்தரின் மனைவியும் மற்றவர்களும் ஓடி வந்து பார்த்தனர். பக்தரின் உடல் முழுவதும் விபூதி நிறைந்திருந்தது! எங்கும் விபூதி மணம்! பிரமித்து போயிருந்தார் அந்த பக்தர்! அங்கு வந்திருந்தது கொலை எண்ணம் கொண்ட “நக்ஸலைட்டும்” சரணாகத இரட்சகனான ஸாயி பகவானும் என்பதை புரிந்து கொண்டனர்.

ஓ சாயி! சரணடைந்தவரைக் காப்பவனே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம்: பக்தியில் கோத்த நல்முத்துக்கள் புத்தகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக