தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

காலம்சென்ற பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவின் சாயி அனுபவங்கள்


எங்கள் வாழ்க்கையை மாற்றிய முதல் சாயி தரிசனம்
( காலம்சென்ற பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி)

பாபாவின் முதல் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.


அதுவரையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து அவதிப்பட்ட சூழலில், காந்தியவாதியும், மிகச் சிறந்த குணச்சித்திரக் கலைஞருமான  கே. சாரங்கபாணி அண்ணன் இல்லம் தேடி வந்தார்.

‘உன் பெரிய பையனுக்கு என் பெண்ணைத் தர விரும்பறேம்மா’ என்ற சர்க்கரைச் செய்தியை இனிப்பாகத் தெரிவித்தார்.

எந்தச் சமயத்தில் சாரங்கபாணி அண்ணன் சம்பந்தம் பேசினார் என்பதைச் சற்றே சிந்திக்க வேண்டும். நாங்கள் நிராதரவான நிலையில் நாளைய பொழுது எப்படி விடியுமோ... என்று  நிம்மதி இழந்து நின்ற நேரத்தில்,  எங்களைத் தேடி வந்து சுப காரியம் பேசினார்.

‘இனி எல்லாம் பாபா’தான் என்றாகிப் போனதால், பாபாவை தரிசித்து இந்த மங்கலச் சேதியை அவர் காதுகளுக்கும் கொண்டு சேர்க்கலாமே என புட்டபர்த்திக்குப் புறப்பட்டோம்.

அவரது திருவடிகளைத் தொழுது நின்றதும் சிரித்துக் கொண்டே,

*‘என்ன... சாரங்கபாணி.. பொண்ண தரேங்கிறாரா...’* என்றார்.

தெய்வீகப் புன்னகை திவ்ய முகத்தில் அருட் புனலாக ஓட, மெல்ல பாபாவின் ஞானக் குரல் கருணையோடு ஒலித்தது.

எங்களுக்கு மெய் சிலிர்த்தது. அந்த ஆச்சரியத்தை ரசித்தவர் போல்,

*‘தாராளமாகக் கல்யாணம் செஞ்சு வையுங்க. மன தைரியத்தோட மங்கல காரியத்தை நடத்துங்க. அவங்க நல்லா இருப்பாங்க..’*

என்று ஆசி கூறினார். பகவானின் வாழ்த்து பலித்தது!

திசை மாறிய எங்கள் வாழ்க்கையை நேர் திசைக்கு கொண்டு வந்ததே சாயி பகவானின் அருளால் தான்.

 - அஞ்சலிதேவி.


ஆதாரம்: http://media.radiosai.org/journals/vol_12/01JAN14/A-Tribute-to-Mrs.Anjali-Devi.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக