தலைப்பு

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஓ ஸாயி! எல்லாவித பயங்களையும் போக்கி காப்பவனே!

ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பய நிவாரிணே நம

ஸர்வ – எல்லா வித
பய – பயங்கள் 
நிவாரிணே – போக்குபவருக்கு

பாபா அவர்கள் ஊழின் தத்துவத்தைப் பற்றி எப்போதும் கூறுவார். எவராயினும் தன்னுடைய அருளுக்கு பாத்திரமானால் அது ஊழ்வினைப் பயன் என்று அடிக்கடி சொல்லுவார். “கட்டுப்பாடான வாழ்க்கை, தன்னலமற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் சேவைசெய்தல் இவைகளை கடைபிடித்தால் என் அருளைப் பெறமுடியும்” என்று கூறுவார்.


ஒரு கிராமத்தில், பீமையா என்பவன் விளைபொருட்களை பங்கிடுவதில், தன் சகோதரனுடன் கருத்து மாறுபட்டு இனி என்ன செய்வோம் என்ற பயத்தில், அந்த வருத்தத்தில், புட்டபர்த்திக்கு வந்து யாத்ரீகர்களிடம் யாசித்து காலத்தை அங்கேயே கழித்து விடலாம் என்ற எண்ணத்துடன் வந்தான். “கொஞ்சம் அன்பும் சாந்தமும் காட்டி இருந்தால் சகோதரனுடனேயே மனமொத்து கிராமத்தில் பெருமையுடன் வாழ்ந்திருக்கலாம்; அதை விட்டு பிறர் அனுதாபத்தை எதிர்பார்த்து அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது” என்று ஸ்வாமி கண்டித்து ஊருக்கு திரும்பிப் போகும்படி கூறினார். பாபா தன்னைத் துரத்திவிடவே அந்த மாதிரி வார்த்தைகள் கூறினார் என்று மனத்தாங்கல் அடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி ஒரு நாள் இரவு தண்டவாளத்தின் குறுக்காக படுத்துவிட்டான் பீமையா. பாபாவின் கருணை அவன் மேல் இருந்தது. தக்கசமயத்தில் பாபா சூட்சும உடலில் அங்கே சென்று அவனை தண்டவாளத்தினின்றும் இழுத்து கீழே உருட்டிவிட்டார்! பர்த்தியில் இருந்தவர்கள், பாபா கனமான ஏதோ ஒன்றை தள்ளுகிறவரைப் போன்று சைகை செய்வதை பார்த்தனர். பாபா, பீமையாவினுடைய முட்டாள்தனத்திற்காக அவனை கடிந்துகொண்டே உடலுக்குள் மீண்டும் எழுந்தார்! புட்டபர்த்திக்கு, தன்னை காத்த தெய்வத்தைக் காணவந்த பீமையா கண்களில் நீர்தளும்ப, “பாபா தம் கையை நீட்டி என்னை பிடித்து இழுத்து ரயில் வண்டிப் பாதையின் சரிவில் உருட்டி விட்டார்”, என்று கூறி நெகிழ்வுற்றான்.

ஓ ஸாயி! எல்லாவித பயங்களையும் போக்கி காப்பவனே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம்: பகவானின் பக்தியில் கோர்த்த நல்முத்துக்கள் புத்தகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக