தலைப்பு

புதன், 3 ஏப்ரல், 2019

பிருகு முனிவருடைய தீர்க்க தரிசனங்கள்!


ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பிருகுமுனிவர் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் ஜாதகத்தை கணித்திருக்கிறார்நூறு ஓலைச்சுவடிகள் ஸ்ரீ சத்ய சாயியின்  வாழ்க்கையைப் பற்றி பெங்களூரில் இப்பொழுது வசித்து கொண்டிருக்கும் சாஸ்திரி ஒருவருடைய பாதுகாப்பில் பத்திரமாக உள்ளதுமுப்பத்தியொன்று அல்லது முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு
முன்பாக இவர் இந்த ஓலைச்சுவடிகளை பகவானுடைய தெய்வீக
சன்னிதானத்தில் படித்துக் காட்டினார். ஆறு பக்தர்கள் அதை கவனித்துக் கேட்டுக்கொண்டார்கள். அதைப் பிரசுரிக்க பகவான் அனுமதி வழங்கவில்லை.

பிருகு முனிவருடைய கூற்று

கலியுகத்தின் கெட்ட செயல்பாடுகள் உச்சத்தினைத் தொடும் காலகட்டத்தில் இயற்கையின் ஐந்து பூதங்களும் மிகவும் ஆக்கிரோஷமாக எதிர்க்கும். சூரியன் ஒருநாள் மிக பிரம்மாண்டமான காந்தப் புயல்களைக் கக்கும். அதனால் செயற்கைக் கோள்கள் நொறுங்கிச் சிதறும். பூமியிலுள்ள அனைத்து மின் மாற்றிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஒரே சமயத்தில் வெடித்து மின் வினியோகம் நின்று போய்விடும். பூமி இருளில் மூழ்கிவிடும்.

உலகம் சமுத்திரங்களினால் சுற்றிலும் வெள்ளமயமாக்கப்படும் (பகவான் இடைமறித்து "வெள்ளங்களினால் மட்டுமல்ல" என்று கூறினார்). மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகை மறைந்து போய்விடும், இயற்கையின் சீற்றத்தினால் துடைத்தழிக்கப்படும். பகவான் அஷ்டமகா சக்திகளையும் பயன்படுத்துவார். அதன்மூலம் தூய்மையான மக்களைக் காப்பாற்றுவார், அவர் தன்னுடைய கைகளை உயர்த்தி "நிறுத்து" என உத்தரவிடுவார். இயற்கை அந்தக் கணமே கீழ்ப்படிதலுடன் அவருடைய கட்டளையை ஏற்று நிறுத்திவிடும். லட்சோப லட்சக் கணக்கிலான இடங்களில் உலகெங்கிலும் பற்பல இடங்களில் தோன்றி நன்மக்களைக் காப்பாற்றுவார். மீதமுள்ள மூன்றிலொரு பங்கு ஜனத்தொகை மிகஅபூர்வமான காட்சியைக் கண்டு பகவான் கடவுளே என்பதை உணர்வார்கள்.

தனது பக்தர்களுக்கு அவர் தன்னுடைய மிக பிரம்மாண்ட சக்திகளை சமமாகப் பங்கிட்டு அளிக்கப் போகிறார், அவருடைய சக்திகளுக்கு எல்லா சாயி பக்தர்களும் பங்குதாரர்களாக இருக்கப் போகிறார்கள், மக்களுடைய மனப்பாங்கினை அவர் முற்றிலுமாக மாற்றி விடுவார்.

சாயி சாம்ராஜ்ஜியம் அமைக்கப்பட்டு உலகம் முழுவதும் அன்றைய தினத்திலிருந்து அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கப்போகிறது. கல்லூரி மாணவர்களை உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்து உலக மக்களைப் புட்டபர்த்திக்கு கொண்டுவந்து சேர்க்கப்  போகிறார், உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும்  மக்கள் லட்சக்கணக்கில் வந்து குவியப் போகிறார்கள், அவர்கள் பர்த்தியின் ஒவ்வொரு அங்குலத்தையும், ஒவ்வொரு குன்றையும்,மரத்தையும் ஆக்ரமிக்கப் போகிறார்கள்.

கங்கை நதியினைப் போன்று சித்ராவதி நதியும் ஜீவ நதியாக மாறிவிடப் போகிறது, கோடிக்கணக்கில் மக்கள் பர்த்தியின் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு கிருஷ்ண சைதன்யப் பிரபுவைப்போல் பக்திப் பரவச மேலீட்டினால் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கப் போகிறார்கள்.

கூட்டம் அலைமோதிக்கொண்டு, புக்கபட்டணத்திலிருந்து சாயியின் பெருமையினைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வரப் போகிறது. பகவான் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தினை ஆகாயத்திலே நடந்து கீழே பாடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நல்கப் போகிறார். பகவானுக்கு மேலே முக்கோடி தேவர்களும் அணி வகுத்து நின்று பகவான் மீது பூமாரி பொழிவதைக் காண்போம்அவர்கள் வேத கோஷங்களை எழுப்பிக் கொண்டும் பூக்களை மேல்நோக்கி அவர்மீது பொழிந்தும் ஆடுவார்கள். உலகமே பிரசாந்தி நிலையமாக மாறிவிடப் போகிறது.

சாயி சாம்ராஜ்யத்தில் விலை உயர்ந்த உலோகமான தங்கம் தன் மதிப்பை இழந்து மக்கள் அதை குப்பைக்கூடைகளில் எறிந்துவிடப் போவதை நாமெல்லாம் பார்க்கப்  போகிறோம், பொருட்களைவிட மனிதர்கள் மேன்மையாக மதிக்கப்படப் போகிறார்கள்தீர்க்கவியலாத வியாதியஸ்தர்கள், வியாதிகளிலிருந்து நிவாரணமளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் வயது குறைந்து இளமை மிக்கவர்களாகிவிடப் போகிறார்கள். மருத்துவ மனைகள் இல்லாமல் போய்விடும். டாக்டர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். உணவு அபரிமிதமாகக் கிடைக்கும், அன்னதான சத்திரங்கள் எல்லா இடங்களிலும் அமைக்கப்படப் போகிறது.

புட்டபர்த்தியும், ஒயிட்ஃபீல்டும் புண்ணிய க்ஷேத்திரங்களாக தகுதியானவர்களுக்கு முக்தி அளிக்கும். காசி, மதுரா, திருப்பதி மறைந்து போய்விடும்.

சாயி பஜனைகள், சாயி சத்சரித்திர பாராயணம், வேத கோஷங்கள் உலக முழுவதும் ஒலிக்கப்போகின்றன, உலகம் வழக்கம்போல் செயல்படும். ஆனால் ஒரே வேற்றுமை, அலுவலகங்களிலும், தொழிற்கூடங்களிலும்வீடுகளிலும் சாயி பஜனையை மிக்க மகிழ்ச்சியுடன் நாள்முழுவதும் பாடிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். மக்கள் பசிதாகம்தூக்கம் இவற்றை மறந்து சாயி பக்தர்களுடைய கால்களில் விழுந்து பணிந்து பகவானுடைய பெருமைகளைக் கூற வேண்டியபடி நிற்கப் போகிறார்கள். மக்கள் பயமின்றி வீட்டின் கதவுகளைப் பூட்டாமல் திறந்து போட்டுவிட்டே இரவில் உறங்கப் போகிறார்கள். வெயிற்காலமோ, குளிர்காலமோ இனி இருக்கப்போவது கிடையாது. இனிமையான இளவேனிற்காலமே இனி முழுமையாக நீடித்திருக்கும், மாதம் மும்மாரி பொழியும்.

பர்த்தியில் சாயி குல்வந்த் ஹாலில் மகரிஷிகள், முனிவர்கள்யோகிகள், சாதகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

ஓர் அருமையான நாளில் பகவான் பறந்து விண்ணில் ஜோதியில் மறைந்து விடப் போகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக