தலைப்பு

வியாழன், 4 ஏப்ரல், 2019

அன்னை ஈஸ்வரம்மா அவர்களின் அனுபவங்கள்!

அதே பாபாதான் இவர் - 2

ஈஸ்வரம்மா, சத்யா ஒரு சமயம் தனக்கு எதிரில் வயதான தாடியுள்ள மனிதராகக் காட்சியளித்தது பற்றி சுப்பம்மாவிடம் கூறினார். இன்னொரு சமயத்தில், “உற்றுக் கேளுங்கள் ஷீரடி சாயி இங்கு இருக்கிறார்” என்று கூறிய போது தனக்கு ஏற்பட்ட பரவச அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். அவளும் அந்த அறையி-ருந்த ஒவ்வொருவரும் கனத்த மரப்பாதுகைகள் அணிந்த காலடிச் சப்தம் முன்னேறி வருவதைக் கேட்க முடிந்தது. பாபா
உட்கார்ந்திருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த காலடிச் சப்தம் நின்றது. முதன்முதலாக இந்த சப்தத்தைக் கேட்டபோது, ஈஸ்வரம்மா, “யார் இங்கு காலணிகள் அணிந்து வருவது” என்று சிறிது சினத்துடன் கேட்டார். அவ்வளவு தத்ரூபமாக அந்த உணர்வு இருந்தது.

தாயின் அனுபவம் இவ்வாறிருக்க, தந்தை பெத்த வெங்கப்பராஜு வேறொரு நிகழ்ச்சியை வருணித்தார். ஒருநாள் மாலையில் பெனுகொண்டாவி-ருந்து வந்த சிலர் (அவர்களில் வழக்கறிஞரான கிருஷ்ணமாச்சாரியும் ஒருவர்) வெங்கப்பா ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், கள்ளங்கபடமற்ற கிராம மக்களை கற்பனைக் கதைகள் கூறி, தவறான வழியில் இட்டுச் செல்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர். வெங்கப்பா மிகவும் மனக்கலக்கம் அடைந்தார். சத்யாவிடம் அவரது தெய்வத்துவத்தை சந்தேகப் பிராணிகளான அவர்களுக்கு நிரூபித்துக் காட்டும்படி சவால் விட்டார். அந்த சமயம் பெத்த வெங்கப்பராஜுவின் வீட்டில் சத்யா தங்கியிருந்தார். சுப்பம்மா இந்த சந்தேகங் கொண்டவர்களைப் பெத்த வெங்கப்ப ராஜுவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பிறகு வீட்டின் உள்ளே ஓர் அறையில் சத்யா சுப்பம்மாவுக்கும், பெனுகொண்டாவி-ருந்து வந்தவர்களுக்கும் ஷீரடிசமாதியின் முழுக்காட்சியைக் காண்பித்தார் (அது ஷீரடி சாயிபாபாவின் புனித சமாதி). அவர்கள் வெட்டவெளியில் நின்று கொண்டு ஷீரடியில் உள்ள காட்சியைக் காண்பது போலவும்(3D), அவர்களுக்கு முன் முழுநிலப்பரப்பு பல மைல்கள் விரிந்து இருப்பது போலவும், அவர்களுக்குத் தோன்றியது. சமாதியில் மலர்கள் தூவப்பட்டிருப்பதையும், நறுமணமிக்க ஊதுபத்திகள் எரிவதையும், தூபத்தின் நறுமணத்தையும் உணர்ந்தனர். ஒருவர் மூலையில் உட்கார்ந்து மந்திரங்கள் கூறிக்கொண்டிருப்பதையும் கண்டனர்.

அங்குள்ள ஹனுமன் கோவிலையும், தொலைவிலுள்ள வேப்ப மரத்தையும் பாபா சுட்டிக்காட்டினார். பெத்த வெங்கப்பராஜு, இந்த பதினாறு வயதுச் சிறுவன் உண்மையிலேயே ஷீரடி சாயி பாபாவின் அவதாரம் என்று உறுதியாக நம்பினார்.

ஒரு சமயம் சென்னையி-ருந்த ஒரு பெண்மணி, தனது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்றறியாது திகைத்தாள். ஷீரடி சாயி பாபாவின் படத்துக்கெதிரே அவனைப் படுக்க வைத்தாள். பல வருடங்கள் கழித்து அவள் சத்யசாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டாள். உயரமாக வ-மையுடன் கூடிய தன் மகனுடன் பர்த்திக்கு வந்தாள். பாபா அவர்களைக் கண்டதும் அவர் அன்னையை நோக்கி “15 வருடங்களுக்கு முன்னாலேயே இந்தப் பையனை என்னிடம் பராமரிக்க ஒப்படைத்தாய் இல்லையா?” என்று கேட்டார்.

ஆம், அதே பாபாதான் மறுபடியும் வந்திருந்தார். *இரண்டு அவதாரங்களிலும் ஒரே விதமான எளிமை, அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, சர்வ வியாபகம், சர்வ வல்லமை, சர்வ ஞானம் ஆகியவற்றைக் காணலாம்.*

ஆதாரம்: “Sathyam Shivam Sundaram” Vol-I by Prof. N Kasturi. Published by Sri Sathya Sai Books and Publications Trust, Prasanthi Nilayam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக