தலைப்பு

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஓ சாயி திக்கற்றவர்களுக்கு உதவுபவனே!

39. ஓம் ஸ்ரீ சாயி அநாத நாதாய நம
அநாத நாதாய – திக்கற்றவர்களின் நாதனுக்கு

சுவாமி காருண்யாநந்தா ராஜமஹேந்திரத்தில் ஊனமுற்றவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் ஓர் இல்லம் நடத்தி வருகிறார். ஒரு நாள் காலை அவர் இல்லத்திலிருந்து வெளியே வந்த போது, துயரம் மிகுந்த பெண் ஒருத்தி
நின்றிருப்பதை கண்டார். அவளது கையில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தப் பெண்ணின் உடல்நிலை சரி இல்லாததால் அவளை மருத்துவமனையிலே சேர்த்துவிட்டு குழந்தையை விடுதியில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வந்தார். பூரண கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் ஏற்படும் என்று மருத்துவர் கூறினார். அந்த மருத்துவமனையில்பாபாவின் படம் ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. பாபா தென்னை மரத்தின் ஓலைகளை விளையாட்டாக பிடித்தவாறு நிற்கும் படம். “ஸாதுவம்மா” என்று அதனை கூறுவார்கள். 
ஒரு நாள் மாலை பிரஸவ விடுதியை கவனிக்க வேண்டியவர்கள் நிழற்படக் காட்சியை பார்த்துவிட்டு திரும்பியபோது அங்கு அவர்களுக்கு ஒரு அதிசயம் காத்து இருந்தது. ஆம்! அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் மகவு பிறந்திருக்கக் கண்டனர். தாயின் அருகில் குழந்தை குளிப்பாட்டப்பட்டு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு தொட்டியில் கிடத்தப்பட்டிருந்தது! தாயும் நன்கு கவனிக்கப்பட்டு இருந்தாள்! யார் அவளுக்கு பிரசவ சமயத்தில் உதவியது? அந்தப் பெண்ணை கேட்டனர். அவள் பாபாவின் ஸாதுவம்மாவின் படத்தைகாட்டி “அதோ அந்த அம்மாதான் நான் வேதனைப்பட்ட போது என்னை கவனித்துக்கொண்டார்கள். வேறு ஒரு நோயாளியை கவனிக்கச் சென்றிருக்கிறார்கள் போல இருக்கிறது. இப்போது வந்து விடுவார்கள்”, என்று கூறினாள். பாபாவின் அன்பின் அளவு எத்தகையது?

ஓ சாயி திக்கற்றவர்களுக்கு உதவுபவனே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம்: 'பக்தியில் கோத்த நல்முத்துக்கள்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக