தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

குற்றவாளியை கூட திருத்தும் கருணை உள்ளம் பாபாவுக்கு உண்டு!


'கல்பகிரி' என்ற குற்றவாளி கொலை ஒன்றை செய்துவிட்டு,தலைமறைவாகி, இமயம் சென்று காஷாயம் பூண்டு,அத்வைதத்தைப் பற்றி சொற்பொழிவாற்றும் அளவுக்கு புலமை பெற்றான். அவன் ஒரு சமயம் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து பாபாவை தரிசித்த போது "தண்டனை யை அடுத்த பிறவிக்கு தள்ளிப் போடாதே. குற்றத்தை ஒப்புக்கொள், காவியை களைந்து விடு" என ஆலோசனை கூறினார்.

புலனறிவுப் போலீசாருக்குக் கூடத் தெரியாத விஷயம் பாபாவுக்கு எப்படி தெரிந்தது ?
ஆச்சர்யப்பட்டான் கல்பகிரி.

பாபாவின் அறிவுரையை ஏற்று காவியை களைந்து காவல் துறையில் சரணடைந்தான்.

மரணதண்டனை கிடைத்தது.
ஜனாதிபதி க்கு கருணை மனு போட்டான் . ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தண்டனை காலம் முடிந்தவுடன் மீண்டும் பாபாவை சந்தித்து, அவரின் திருக்கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜபமாலையை பெற்று கொண்டு அவர் துறவு வாழ்க்கையை இமயம் சென்று மீண்டும் தொடர்ந்தார்.

மரணதண்டனை...ஆயுள் தண்டனை யாக குறைந்து இறைவன் அருளால் ஜபமாலையும் பெற வைத்தது எந்த சக்தி?

ஆதாரம்: Bhagawan Sri Sathya Saibaba Satcharitram book - Published by giri publication. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக