தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

என்னை விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி நீ என் குழந்தையே!


ஸ்வாமியின் வாழ்வில் நடந்த இரு சம்பவங்கள்.. 

(1) கர்நாடக மாநிலத்தில் உள்ள "கொத்தனகட்டா" என்னும்  ஊரில் இருந்து இரு சிறுவர்கள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு செலவுக்கு கூட பணமின்றி கடன் வாங்கிக் கொண்டு புட்டபர்த்தி சென்றார்கள்.

பாபா அவர்களை " கடன் வாங்கியெல்லாம் வந்து என்னை காண வர வேண்டாம், என்னை உங்கள் ஊரிலேயே இனி தரிசிக்கலாம் " என்று கூறினார்.

சிறுவர்கள் பிரசாந்தி நிலயத்தில் பஜனை பாடல் களை கற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பிய பிறகு,அவ்விடத்தில் சலவை கல்லால் ஆன சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து நிறுவினர்.
தினமும் சிவலிங்கத்தின் முன் பஜனை செய்து வந்தார்கள் அந்த சிறுவர்கள்.
சிவலிங்கத்தில் சிற்சில மாற்றங்கள் தோன்றலாயின. நாளடைவில் அது உருவமாகப் புலப்பட ஆரம்பித்தது.

என்ன ஆச்சர்யம்!!
அதில் தெரிந்த  உருவங்கள் ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா மற்றும் சீர்டி ஸாயிபாபா என்று அறிந்ததும், என்னே பாபாவின்  மகிமை என்று அச்சிறுவர்கள் அளவிலா  ஆனந்தம் அடைந்தனர்.

இவ்வாறு தன்னை நம்புபவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் பாபா ,தன்னை நம்பாதவர்களின் மீது ஒரு துளியும் வெறுப்படைவதில்லை.பின் வரும் சம்பவத்தின் மூலம் அதை உணரலாம்.

(2) ஜோயல் ரியோர்டன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். அவரின் மனைவி டயானா பாபாவின் பக்தை.


ஒரு சமயம் டயானா ஸாயிபாபா வை தரிசிப்பதற்காக புட்டபர்த்தி புறப்பட தயாரானாள்.அவளது கணவன் ஜோயல் அவளுக்கு நேரெதிர். பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாதவன். அவன் பாபாவை சோதனை செய்ய திட்டமிட்டான்.

யார் யாரை சோதனை செய்ய நினைப்பது? வேடிக்கையாக இல்லை?
பாபாவை தரிசிக்க இந்தியா செல்லும் போது தானும் கூட வருவதாக ஜோயல் தன் மனைவியிடம் தெரிவித்தான். இதை கேள்விப்பட்ட அவன் நண்பர்கள் ," பாபாவிடம். நீ என்ன கேட்கப் போகிறாய்?" என்று கிண்டலாக கேட்டனர். இதற்கு அவனும் கிண்டலாகவே பதில் சொன்னான்.
வானத்தில் தோன்றும் வானவில்லை கேட்பேன்.எந்த மந்திரவாதி யாலும் சட்டைப்பையிலிருந்து வானவில்லை வரவழைக்க இயலாது" என்றான்.

கணவன் மனைவி இருவரும் புட்டபர்த்தி வந்து சேர்ந்தார்கள். பிரசாந்தி பவன் பின்னால் தங்கியிருந்தார்கள்,அந்த வெளி நாட்டு தம்பதிகள். எதேச்சையாக வானத்தை பார்த்த ஜோயல் அந்த காட்சி யை பார்த்து மலைத்து போனான்.' வானவில் கீழ் வானத்தில் தோன்றி வளைவு இல்லாமல் உச்சி்நிலையை அடைந்தது. பிறகு எவ்வளவு வேகமாக வளர்ந்தது, அவ்வளவு வேகமாக மறைந்தது'.

ஆச்சர்யப்பட்ட ஜோயல் இச்சம்பவத்தை வெளிப்படுத்தி கொள்ள வில்லை.
மறுநாள் கணவன் மனைவி இருவரும் பகவானை தனிமையில் சந்தித்த போது பாபா அவனிடம் பேசியது இதுதான்...,...
" அப்புறம்.... வானவில் எப்படி இருந்தது "?


பகவானை சோதிக்க நினைத்த மடமையை  நொந்து கொண்டார் ஜோயல். இவ்வாறு பாபா ஜோய்லின் இதயத்தில் நம்பிக்கை என்னும் விதைகளை விதைத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஜோயல் பாபாவின் தீவிர பக்தராக மாறினார்.

ஆதாரம்: ரா கணபதி, பாபா: சத்ய சாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக