தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபா தன் கையால் உண்டாக்கும் பொருட்களை அவரே பயன்படுத்துவார?


பகவான் சத்யசாய்பாபா பக்தர்களுக்கு துன்பம் வந்த போதெல்லாம் கையசைப்பின் மூலம் விபூதி, தாயத்து என வரவழைத்து நிவர்த்தி செய்தார். அதுபோலவே பாபா தனக்கு துன்பம் வரும்போது இம்மாதிரியான அற்புதங்களால்  சரி செய்து கொள்ள முடியுமா?

(சாதாரண பக்தனுக்கு இம்மாதிரியான கேள்வி எழுவது நியாயமே! அதுபோல் சம்பவமும் நிகழ்ந்தது)


புட்டபர்த்திக்கு அருகில் இருந்த சாஹிப் தெருவில் உள்ள தோட்டத்திற்கு பக்தர்களுடன் செல்லும் வழக்கம் பாபாவிற்கு இருந்தது. அம்மாதிரி ஒருமுறை அந்த தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில்,  பாபாவின் காலில் ஒரு 🐍கருநாகம் தீண்டி விட்டது. பாபா அதை கண்டுகொள்ளாமல் பக்தர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் நடந்த பின்னர் விஷம்  தலைக்கேறியது.  உடனே பாபா மயக்கமடைய ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த பக்தர்களில் சிலர் அந்த நாகத்தை அடிக்க நினைக்க,  அவர் அவர்களை தடுத்து பாம்பினை பார்த்து "போய்விடு "என்றார்.

மயங்கிய நிலையில் இருந்த பாபா கண்களைத் திறந்து சில மந்திரங்களை ஜெபித்ததுடன்,  பக்கத்தில் இருந்த பக்தரிடம் கைகளை வேகமாக வீசும் பாவனையில் வானை நோக்கி உயர்த்தச் சொன்னார்.
 என்ன ஆச்சர்யம் அவ்வாறு செய்ய பக்தரின் கையில் ஒரு தாயத்து!

அதை அப்படியே நாகம் தீண்டிய இடத்தில் வைத்து கட்டும்படி தெரிவித்துவிட்டு மேலும் சில மந்திரங்களை முணுமுணுத்தார் பாபா.
 அடுத்த நொடியே விஷம் முறிந்து குணமானார்.
 பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்த பக்தர் ஒருவர் "அந்த தாயத்தை உங்கள் கையிலேயே வரவழைக்க வேண்டியது  தானே பாபா எதற்கு இன்னொருவர் கையில் வரவழைத்தார்கள்"  என்று குதர்க்கமாய் கேள்வி கேட்க பாபா சொன்ன பதில் இது தான்.

என் நன்மைக்காக என் கையால் உண்டாக்கும் பொருள்களை நான் உபயோகிப்பதில்லை. அதனால் அந்த அற்புத சக்தியை இன்னொருவர் கைகளுக்கு கொடுத்து நான் தாயத்தை பெற்றுக் கொண்டேன்"

அதுதான் ஸ்ரீ சத்ய சாய்பாபா !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக