தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சத்ய சாயி பகவானின் உத்தரவை நிறைவேற்றும் நீர், நிலம், காற்று.

(சென்னையை சேர்ந்த சாயி அன்பர் திரு வைத்தியநாதன் அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..)

1970-ல் இந்தியாவின் மானம் கப்பலேறாமல் தடுக்கப்பட்டது. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (Integral Coach Factory) வைத்தியநாதன் என்பவர் பொது மேலாளராக  இருந்த சமயத்தில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 100 ரயில் பெட்டிகளை  ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய
ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இது ஜப்பானிடமிருந்து இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. திடீர் வேலை நிறுத்தம் ஒன்றினால்  ஒப்பந்தம் செய்த காலத்துக்குள் பெட்டிகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் மிகவும் கவலை கொண்டார். ஜப்பான் போன்ற முன்னேறிய நாட்டுக்கு உரிய காலத்தில் ஒப்பந்தத்தை நிறைவு செய்வது எவ்வளவு கௌரவம்? ஆனால் தரமும் நன்றாக இருக்கவேண்டும், இல்லையேல் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும்.

இதுபோன்று தர்மசங்கடமான நிலைமையில் புட்டபர்த்திக்குச் சென்று பாபாவிடம் பிராத்தனை செய்தார் வைத்தியநாதன். பாபாவோ அவரிடம் “கவலைப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன். ரயில் பெட்டிகள் அனைத்தும் அனுப்புவதற்கு ஆயத்தம் ஆன பிறகுதான் அவைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் சென்னை வந்து சேரும்” என்று பகவான் வைத்தியநாதனிடம் உறுதிபடக் கூறினார். கடலில் திடீரெனக் கிளம்பிய, சற்றும் எதிர்பாராத புயலின் காரணமாக, கப்பல் சென்னைக்கு வருவதற்குத் தாமதம் ஏற்பட்டது. அதனால் ரயில் பெட்டிகள் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் கிடைத்தது. பிறகு அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சி பாபா நிலம், நீர், காற்று ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர் என்பதை நிரூபிக்கின்றன.

ஆதாரம்: லீலா நாடகசாயி, எழுதியவர்: ரா. கணபதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக