தலைப்பு

புதன், 17 ஏப்ரல், 2019

கோவை சாயிபாபா காலனி பாபா கோவிலுக்கும் ஸ்ரீ சத்ய சாயிக்கும் உள்ள தொடர்பு!


இதற்கு முன் எங்கும் இல்லாத ஒரு அவதாரத்திற்கு இன்னொரு அவதாரம் செய்த பிரதிஷ்டை, நடத்திய வைபவம், பகிர்ந்த அருளுரை, கொடுத்து வைத்தவர்கள் கண்களால் கொடுத்து வைத்த கடவுள் ஸ்ரீ சத்ய சாயி பிரதிஷ்டை செய்த கோவை நாகசாயி மந்திரை குறித்து பாபாவே பேசிய அதிசய ரகசியங்கள் இதோ...

கோயம்புத்தூர் நாகசாயி மந்திரில் உள்ள சீரடி சாய்பாபாவின் பளிங்கு சிலை 26 பிப்ரவரி 1961ல் பகவான் சத்ய சாய்பாபாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்த பின்னர் பகவான் ஆற்றிய தெய்வீக அருளுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 

உலகிலுள்ள எல்லா மக்களுக்காகவே நான் வந்துள்ளேன். உலகில் எல்லோரும் எனக்குச் சொந்தமானவர்களே. சொந்தம் ஆகாதவர் எவரும் உலகில் எனக்கு இல்லை. அவர்கள் இந்தப் பெயராலோ, வேறு எந்தப் பெயரில்வேண்டுமானாலும் வேண்டிக்கொள்பவராக இருக்கலாம். ஆனால் அவர்களும் என்னுடையவர்களே.


ஜனவரி 7 1943, ஓர் வியாழக்கிழமை அன்று(ஆதாவது நான் சீரடி சாய்பாபாவின் அவதாரம் என பிரகடனம் செய்த முன்று ஆண்டுகளுக்கு பின்னர்) ஏராளமான பேர் இங்கு பஜனை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் நான் நல்ல பாம்பின் உருவில் வந்து மலர்க்குவியல்களின் நடுவே இருந்து பஜனை கேட்டு மகிழ்ந்ததோடு இல்லாமல் எண்ணற்ற பேருக்கு தரிசனமும் தந்தேன். அதுமட்டுமல்லாமல், நாகவடிவில் புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தேன்.  இதன் காரணமாகவே இந்த மந்திரை நாகசாயி மந்திர் என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.


இன்றைய தினமானது, பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட வேண்டியது ஆகும். மேலும்  இந்த நாள்,  தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் மிக அரிதானது. ஒரு அவதார புருஷர், மற்றொருவரின் விக்ரகத்தை நிறுவுகிறார். நான் அதை மிகவும் வேடிக்கையாக காண்கிறேன். தீயவர்களை அழிக்க, இலங்கைக்கு செல்லும் முன், ஶ்ரீ இராமர் இராமேஸ்வரத்தில் சிவ லிங்கத்தை நிறுவினார். இப்போது அழிப்பதற்கு இல்லை. என்னுடைய செயலானது, தர்மத்தை ஸ்தாபிப்பது. இப்போது செயல் அவதாரம் எடுக்கும் முன்பு, அதற்கு முந்தைய செயலாக, நானும் இந்த விக்ரகத்தை நிறுவுகின்றேன்.


இன்றைக்கு பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது, இதே இடத்தில் சாய் நாதர் நாகமாக உருவெடுத்து. ஆனால் உங்களுக்கு,  இந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி விக்ரகத்தை நிறுவ இத்தனை ஆண்டுகள் ஆயின. நன்று! பதினெட்டு ஆண்டுகளாக சேர்ந்ததும், காரணமாகத்தான். இவை அனைத்தும் என் திட்டமே!  பதினெட்டு, ஒரு ஆழமான பொருள் கொண்ட, மறைபொருள் எண்ணாகும். இங்கு, இந்த மண்டபத்தில் பதினெட்டு நபர்களை நான் காண்கிறேன். அந்த பதினெட்டு பேரும், வேதாகம சடங்குகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள். ஆறு பேர் ஜகத்திற்கும், ஆறு பேர் காலத்திற்கும், மூன்று பேர் மனம், எண்ணம் மற்றும் அறிவுத் திறனிற்கும், இருவர் யாகத்தை தொடங்கி நடத்தும் ஜோடிகளாகவும், கடைசி நபர் ஆன்மா மற்றும் சாட்சியாகவும் நான் காண்கின்றேன்.
இத் திருக் கோவிலில், ஒரு அடையாளச் சின்னமாக, ஶ்ரீ நாக சாயினை நிறுவுகிறேன். இந்த நல்ல தருணத்தினை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், நீங்கள் அவரை உங்களது இதயத்தில் நிறுவி, அவரை உங்களின் ‘ஹ்ருதய-ஸ்தாயீ’’ யாக ஆக்க வேண்டும்.

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
(26 பிப்ரவரி 1961/ ஸ்ரீ நாகசாயி மந்திர், கோவை)

பகவான் பிரதிஷ்டை செய்த புகைப்படம் இன்றும் நாகசாயி
மந்திரில் தினமும் பூஜிக்கப்பட்டு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஆதாரம்:
ஸ்ரீ நாகசாயி கோவிலின் தல வரலாறு புத்தகம் 1977- ஸ்ரீ நாகசாயி டிரஸ்ட்  கோவை-641043 & Dinamani - 26 April 2011 Coimbatore edition


1 கருத்து: