தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமைதியும் ஆனந்தமும் அடைவது எப்படி?

(சத்ய சாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திரு. நிதின் ஆச்சார்யா பகிர்ந்தது)

ஒரு முறை பகவான் மந்திர் வராந்தாவில் இருந்து ஒரு பக்தரை பேட்டிக்கு அழைத்தார், உடன் அவருடைய 'பெரிய' குடும்பத்தினரையும் அழைத்தார்.

பேட்டியின் இறுதி பகுதியில், அந்த குடும்பத்தினரை க்ரூப் போட்டோ எடுக்க, ஸ்வாமி என்னை உள்ளே அழைத்தார்.

போட்டோ பிடித்து முடித்த பின்னும் பேட்டி தொடர்ந்தது, நான் அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த நபர் ஸ்வாமியிடம் ஒரு கேள்வி கேட்டார், "ஸ்வாமி, வாழ்வில் அமைதியையும், ஆனந்தத்தையும் அடைவது எப்படி?"

ஸ்வாமி, "கடந்த ஒரு மணி நேரம், நீயும் உன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக உள்ளீர்கள். எப்படி?" என்றார்.

அம்மனிதன் விடையளித்தான், "அதற்கு காரணம் நீங்கள் ஸ்வாமி. நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள்."

உடன் ஸ்வாமி தொடர்ந்தார், "மனதில் இந்த உணர்வை எப்போதும் கொண்டிருந்தால், நீ எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.."
~~~

இறைவன் நம்முடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சமேது?!?! அமைதிக்கு குறைவேது?!?!

ஜெய் சாய்ராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக