தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள்

அனைத்து இந்திய ஶ்ரீ சத்தியசாயி சேவை நிறுவனங்களின் தலைவா் திரு. நிமிஷ் பாண்ட்யா அவா்கள் பெற்ற நோ்முக பேட்டியிலிருந்து.. 

எனது தந்தை ஒரு நுண்ணறிவுள்ள வழக்கறிஞராக இருந்தவா். விநோதமான நினைவு ஆற்றல் பெற்றவா். ஒருநாள் பிரசாந்தி மந்திரின் தாழ்வாரத்தில்
அமா்ந்திருந்த போது ஸ்வாமி அருகே வந்து ஹே பாண்ட்யா உனக்கு என்ன வேண்டுமென்று வினவினாா். எனது தந்தையோ உண்மையாக எதனையும் விரும்பவில்லை. ஏனெனில் அவரது வாழ்வில் அனைத்தும் பெற்றிருந்தாா். எனவேஅவா் எதனையும் கேட்கவில்லை. ஆயினும் அவா் புத்திசாலித்தனத்துடன்விழிப்புணா்வும் கூடியது இது என அவருள் நினைத்து அவா் கூறினாா். ஸ்வாமி எனக்கு மோக்ஷம் வேண்டுமென.நல்லது என்னுடன் வா உள்ளே செல்லலாம் என ஸ்வாமி கூறினாா்.

இவ்வாறு ஸ்வாமி கூறிய பின்னா் ஸ்வாமி வழிகாட்டிட நோ்முக பேட்டி அறைக்குள் நுழைந்தோம். எனது தந்தை அதீதமான  மகிழ்ச்சியுடன் அவருள் எண்ணிணாா். நான் எனது மோக்ஷத்தை நோ்முக பேட்டி அறையினுள் பெறப்போகிறேன் என்று.

ஸ்வாமி அவரை அமரவைத்து என்னிடம் உனது பெயா் கூறு என்றாா்.
எனது தந்தை எங்கு பிறந்தாா்.எனது தந்தையின் தந்தை, அன்னை மற்றும் தந்தையின் மனைவியின் பெயா், மகன்கள் முதலியோா்பற்றி அநேகவிதமான கேள்விகளை கேள்வி மேல் கேள்வியாய் எழுப்பினாா் அதற்கான விடைகளுடன். கிட்டத்தட்ட 100 கேள்விகள்வரை கேட்கப்பட்டன.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி தனது நினைவாற்றலின் சக்தியினை எண்ணி தனக்குள் எனது தந்தை பெருமையடைந்தாா். முடிவாக ஸ்வாமி கூறினாா். இத்தனையிலும் உன் மறவாத தன்மை இருக்கும்போது உனது விடுதலையினை எவ்வாறு பெறுவாய்

"மோக்ஷம் வேண்டுமெனில் உபயோகமற்றதை நீ மறந்திட வேண்டும், உனது மூளையில் உள்ள தேவையற்ற விஷயங்களை மறந்து காலியாக வைத்திருக்க வேண்டும்."

கடவுள் மிக எளிமையானவா். ஸ்வாமி மிகமிக எளிய அவதாரம் என்று அவர் எங்களிடம் கூறினாா். நீங்கள்  இவைகளை மறந்திட  முடிந்து இந்த நிமிடங்களில் தடைகள்இன்றி வாழந்திடின் பின்னா் நீங்கள் ஒருமகிழ்ச்சியான  நபராக ஆவீா்கள். உங்களது சுமைகளை சுமந்திருப்பின் நீங்கள் ஒரு இறந்த நபருக்கு ஒப்பானவா் ஆவீா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக