தலைப்பு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

த்வாரகாமாயியில் வஸிப்பவரே!ஓம் ஸ்ரீ ஸாயி த்வாரகாமாயி வாஸினே நம

த்வாரகா மாயி – ஷிர்டியில் உள்ள இடங்களில் ஒன்று, 
வாஸினே – வஸிபவருக்கு

சீரடி பற்றி கொஞ்சமும் கேள்விப்படாத தன்னுடைய ஆரம்பகால பக்தர்கள் சிலரை இளம் சாயி, ஷிர்டிக்கு போய் வருமாறு உத்ஸாகப் படுத்துவார். ஷிர்டிக்கு போகும் மார்க்கம், அங்கு கிணற்றில் நீர் இறைக்கும் முறைகள், விவசாயம் செய்யும் வகை, ஸமாதியைச் சுற்றிவைத்திருக்கும் படங்கள் இவைகளைப் பற்றி நெடுநாள் அங்கேயே இருந்து வாழ்ந்து, நன்கு அறிந்தவர் போல சொல்லுவார்.

ஒரு சமயம் பக்தர்கள் சிலர் ஷிர்டிக்கு புறப்பட்டபோது “நீங்கள் த்வாரகாமாயிக்குச் சென்று அங்குபடுத்து உறங்குங்கள். நான் கனவில் வந்து உங்களுக்கு காட்சி அளிப்பேன்” என்று கூறினார். அவ்வாறே அந்த பக்தர்களும் த்வாரகாமாயிக்குச் சென்றனர். அம்மொழியை நிறைவேற்ற பாபாவும், அவர்களது அவர்களது கனவில் தோன்றி அவர்களுடன் பேசி மகிழ்வித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

ஓ ஸாயி! த்வாரகாமாயியில் வஸிப்பவரே!
உமக்கு எனது வணக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக