1950ம் வருடம் ஏப்ரல், 14ம் தேதி விசித்திரமான நிகழ்வு ஒன்று புட்டபா்த்தியில் நிகழ்ந்தது.
அது ஶ்ரீ ரமணமகரிஷி மஹாசமாதி அடைந்த நாளாகும். இதுபற்றி ஶ்ரீவரது எனும் பக்தா் தெரிவிக்கிறார்...
திருவண்ணாமலையில் ஶ்ரீரமணமகரிஷி மறைந்த இரவு 9.00மணி அளவில் கீழே விழுவதைப்போன்ற அச்சுறுத்தும் வகையில் திடீரென அசைவற்று பகவான் பாபா அவர்கள் பரவசநிலைக்கு சென்றுவிட்டார். நான்(ஶ்ரீவரது) மற்றும் மற்றொரு பக்தர் ஶ்ரீ கிருஷ்ணா ஆகிய நாங்கள் பகவான் பாபா அவர்களை எங்களது கரங்களில் தாங்கிகொண்டோம்.
எங்கள் கரங்களில் சோர்ந்து விழுந்த நிலையில் இருந்த பகவான் பாபா அவா்களின் உடல் விறைப்பாகி பலகைபோல காற்றினில் எழும்பி இருக்க பகவான் பாபா முணுமுணுத்தாா் "மகரிஷி என்னை அடைந்துவிட்டர்" என.பின்னா் அவரது வலது பாதத்தின் அடிப்பாகம் மெல்லிய காகித சுருள் போன்று திறந்து இனிமை நிறைந்த வாசமுடன் விபூதி வேகமாக வெளியே தோன்றி சுமார் இரண்டு கிலோ அளவில் பாய்ந்து வந்தது. விபூதியினை நாங்கள் சேகரிக்கும் போது பகவான் பாபா அசைவற்று இருந்தார். சிறிது நேரம் சென்றபின் அவர் இறங்கி சாதாரணமான தன்நிலைக்கு திரும்பினாா். ஶ்ரீ ரமணமகரிஷி அவருடன் இணைந்துவிட்டாரென பின்னா் எங்களிடம் அறிவித்தார். மறுநாள் செய்தி தாள்களில் ஶ்ரீரமண மகரிஷி சமாதி அடைந்த நேரத்துடன் பிரசுரிக்கப்பட்டது. என்ன நேரம் என பத்திரிக்கைகளில் குறிக்கப்பட்டதோ அதேநேரத்தில் பகவான் பாபா அவா்கள் பரவச நிலைக்கு சென்றாா்.
ஆதாரம்: Miracles are My Visiting Cards, Erlandur Haraldsson, Sai Towers, Prashanti Nilayam, 1987, pp. 167-168
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக