தலைப்பு

வியாழன், 2 நவம்பர், 2023

ஶ்ரீ சத்யசாயி யுகம் - சமூக ஊடக சரித்திரம்!

தென்னாடுடைய சாயிசிவன்

எந்நாட்டவர்க்கும் இறைவனே என்று

தமிழ் பேசும் பக்தர்கள் கூடி

வாட்ஸாப்பில் ஒய் நாட்? என்றதில்

‘ஶ்ரீ சத்யசாயி யுகம்’ மலர்ந்தது!


மூவுலகும் முடங்கிப் போனதோ 

என உலகமே முனகின 

கொரோனா சமயத்திலும்…

முடங்காத முன்னேற்றமாய்

சாயி பக்தி வளர்ந்தது! 


போஸ்டுகள் ஊற்றெடுக்க 

போஸ்டர்கள் இல்லாமலே

பக்தர்கள் மனதில் ‘யுகம்’

பேஸ்ட் ஆகி ஒளிர்கிறது!


இது மறைபொருள்…

மறந்துவிடக் கூடாது

மறைந்துவிடக் கூடாது என

வாட்ஸாப் பதிவெல்லாம்

ப்ளாக்-ஸ்பாட்டிலும்

பதிவேறுகிறது!


அழகழகான அனுபவத் தொகுதிகள்

ஆடியோமேக்கிலும்

ரகரகமான ஆடியோக்கள்

ஸ்பாட்டிஃபையிலும்

அரங்கேறுகிறது!


இது பியூட்டிஃபுல் லைஃப்

யூட்டியூபே புது ஒயிஃப் !

என்றாகின வேடிக்கை உலகில் 

‘யுக’ சேனலும் உதித்தது!


அன்றாடம் அருளமுதமும்

பாட்டுகளும் பேட்டிகளும்

போட்டியிட்டுப் பரப்புகிறது

பரப்பிரம்ம சாயி பெருமையினை!


பக்தர்களின் அகநூலை

சாயி இறைவன் இழுத்துப் பிடிக்க

முகநூலிலும் பக்கம் பிறந்தது!


மூழ்கி முத்தெடுக்க இவை 

இன்டர்நெட் ஞான சமுத்திரம்!

நாளிதழ் போல வரும் 

நெட்வொர்க் திருமந்திரம்!


ஶ்ரீ சத்யசாயி யுகம் 

சப்ஸ்க்ரைப் பண்ணி

ஃபாலோ செய்பவை

இவை மூன்றே…


சாயியே பேரிறைவன்; 

சாயி நாமமே புனித மந்திரம்!


சாயி உடல் மறைந்த சம்பவம்;

வெறும் மாய இறைத் தந்திரம்!


சாயி மூன்றானவர்; அவர் வாக்கே

நமக்கு வேத சாத்திரம்!


இதனை 

லைக் செய்பவர்களின்

லைஃப் உயர்வது நிச்சயம்!

ஶ்ரீ சத்யசாயி யுகம் பரம சத்தியம்!


✍️ கவிஞர் சாய்புஷ்கர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக