எவ்வாறு ஆப்ரிக்கா தேசத்தை சேர்ந்த நபருக்கு பேரிறைவன் பாபா தேடி வந்து அருள் புரிகிறார்? அப்படிப் புரிந்து உயிரையே காப்பாற்றுகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!
ரியூபென் லோவன்பெர்க் என்பவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் டெனிஸ் கபேலா! அவர் ஒரு கிளார்க். பேரிறைவன் பாபாவை பற்றி டெனிஸ் தெரிவிக்க... ரியூபென்னுக்கு பாபாவின் மேல் அன்பு வருகிறது! அந்த அன்பு நாளுக்கு நாள் வளர்கிறது!
ஒருமுறை டெனிஸ் ஆப்ரிக்காவில் ஓர் இடமான டர்பனுக்கு செல்ல வேண்டி இருக்கிறது! அவர் வீடோ 20 கி.மீ தள்ளி ஒர்லாண்டோவில் இருக்கிறது! அவர் விமான நிலையத்தில் இறங்கிய இரவு, அங்கிருந்து அவர் இல்லம் செல்ல ரயிலோ, பேருந்தோ, டாக்ஸியோ எதுவுமே இல்லை! ஆகவே மெதுவாக பொடி நடையாக நடந்து கொண்டிருக்கிறார்! அப்படியே நடந்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு டாக்ஸி அவர் முன் நிற்கிறது!
காற்றைக் கிழித்து வரும் மின்னலாக அந்த டாக்ஸி அவரை பக்கவாட்டில் முற்றுகை இடுகிறது! உள்ளே இருந்த ஓட்டுநர் , கார் கண்ணாடியை திறந்து, நன்று பழக்கப்பட்டவர் போல "என்ன கபேலா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்கிறார்!
டென்னிஸ் கபேலாவுக்கோ எதுவுமே புரியவில்லை... அந்த டிரைவர் யார் என்று கூட தெரியாது! அப்படியே குழம்பிய படி சொவேட்டோ செல்வதாகச் சொல்கிறார்! அந்த டிரைவர் அப்படியே அவரை ஏற்றிக் கொண்டு , அந்த செவேட்டோ'வில் அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்ற முகவரி கூட கேட்காமல் மிக மிகச் சரியாக அவர் வீட்டு வாசலுக்கு வந்தே அந்த மர்ம டிரைவர் இறக்கிவிடுகிறார்! டெனிஸ் கபேலா இறங்கிய உடனேயே அந்தக் கார் சென்றுவிடுகிறது.. பணமும் வாங்கிக் கொள்ளவில்லை.. நன்றி சொல்லும் வரையில் அந்த கார் காத்திருக்கவும் இல்லை! பயணத்தின் போது ஒரு வார்த்தையும் பேசவில்லை! டெனிஸ் கபேலாவுக்கு ஒரே ஆச்சர்யம்!
சில நாட்கள் கடந்து போகிறது! டெனிஸ் அவர்களின் முதலாளி லோவன்பெர்க் புட்டபர்த்தி வருகிறார்! பாபாவை தரிசிக்கிறார்! அப்போது உடன் வந்த டெனிஸ் கபேலாவுக்கு பாபா உருவம் பதித்த மோதிரத்தை லோவன்பெர்க் அளிக்கிறார்! பிறகு ஆப்ரிக்காவில் டெனிஸ் கார் ஓட்ட பின் சீட்டில் லோவன் பெர்க் மற்றும் அவர் குடும்பம் அமர்ந்து பயணித்து வருகிறது!
எதிர்பாரா விதமாக திடீரென கார் குடை சாய்வதற்கான வேலைகளை சீரற்ற சாலை செவ்வனே செய்கிறது! களிமண் இடறிவிடுகிறது! டெனிஸ் அவர்களால் எதுவுமே செய்ய இயலவில்லை! இக்கட்டான சூழ்நிலை.. ஸ்டியரிங்'கில் இருந்து கையை எடுத்து , துரௌபதி போல் தலை மேல் கை வைத்து "பாபா ! எங்களுக்கு உதவி புரியுங்கள்!" என்று நாபிக் கமலத்தில் இருந்து வார்த்தைகள் எழக் கூவுகிறார்!
தனது உணர்ச்சியை மெதுவாகக் கட்டுப்படுத்தியவாறு டெனிஸ் பாபாவை நினைந்து நன்றிப் பெருக்கோடு கண் கலங்குகிறார்! உடனே தான் கையில் அணிந்த மோதிரத்தை கவனிக்கிறார்.. மோதிரம் அப்படியே இருக்கிறது.. ஆனால் பாபாவின் உருவத்தை காணவில்லை.. பாபாவே இந்த பெரும் விபத்தை காப்பாற்ற விரைந்ததாக உணர்கிறார்! மோதிரத்தில் இருந்து பாபா வெளியேறியது தனது பக்தர்களை காப்பாற்றவே என்பதை உணர்ந்து கொள்கிறார் டெனிஸ்! பிறகு டெனிஸ் மற்றும் லோவன்பெர்க் குடும்பம் விட்ட நிம்மதிப் பெருமூச்சில் கார் அமைதியாக நகர்கிறது!
(Source : Miracles of Divine Love - vol 1 | Page : 51,52 | compiled by p. Guru moorthy )
ஆக பாபாவின் சிருஷ்டி பொருட்களுக்கு மட்டுமல்ல பாபா உருவம் பதித்த சகல பொருட்களுக்கும் பிரபஞ்சப் பேராற்றல் இருக்கிறது! அது நமக்கு அரண், அதுவே நமக்கு பாதுகாப்பு! பாபாவின் உருவம் பதித்த அடையாளங்கள் அனைத்தும் வெறும் அடையாளம் அல்ல அது சாட்சாத் பேரிறைவன் பாபாவே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக