தலைப்பு

புதன், 18 அக்டோபர், 2023

🔥 வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்! (சிறு தொகுப்பு)

நவராத்திரி 4ம் நாள் துவங்கி விஜய தசமி அன்று மஹா பூரணாஹுதியுடன் நிறைவடையும் பிரசாந்தி நிலையத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சியான 'வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்' இன்று முதல் 18.10.2023 துவங்க உள்ளது.

7 நாட்கள் தினசரி காலையில் பூரண சந்திர அரங்கில் யாக யக்ஞங்களும், பாராயணங்களும், அர்சனை, அபிஷேகங்களும் நடைபெறும். அதே 7 நாட்கள் மாலை, பகவான் பாபா அவர்களால் துவங்கப்பட்ட 'பிரசாந்தி வித்வன் மகாசபை'யின் மூலம் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை/இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 


இவைகளை பற்றிய ஒரு தொகுப்பு:

1. சஹஸ்ர லிங்க அர்ச்சனை - 

பூர்ண சந்திர அரங்க மேடையின் வலது புறம், ஒரு பண்டிதர் ஒருமுனைப்பாட்டுடன் அமர்ந்து ருத்ர பாராயணம் செய்து கொண்டே, அதே சமயத்தில் களிமண்ணைக் கொண்டு 1008 சிறிய லிங்கங்களை செய்து அதற்கு 16 வகையான பூஜைகள் (ஷோடச உபசாரங்கள்) செய்வார். 21 முறை நமகம் மற்றும் சமகம் கூறி 8 மணி நேரம் இந்த பூஜை ஒரு தபஸ் போல 7 நாட்களும் நடைபெறும்.


2. கலச பூஜை - அதே பக்கம் சிறிது தள்ளி, ஒரு கலசம் சிறிய பலகையின் மேல் அமர்த்தி, தேவி ரூபமாக கருதப்படும் அந்த காலசத்திற்கு தினமும் லலிதா சஹஸ்ர நாமம், லலிதா திரிசதி, லலிதா அஷ்டோத்தரம் மற்றும் கட்கமாலை பாராயணம் செய்து குங்குமம் மற்றும் மஞ்சள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும். விஜய தசமியன்று அந்த கலசத்தில் இருக்கும் தெய்வீக அதிர்வுகளை உள்ளடக்கிய தீர்த்தம் அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும்.


3. கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் - 7 நாட்களில் கிருஷ்ண யஜுர் வேதம் முழுவதும் பாராயணம் செய்யப்படும். மிகப்பெரிய சாகையான இப்பகுதியினை 7 நாட்களுக்குள் முடிக்க வேண்டியிருப்பதால், சில நாட்கள் இரவு 9 மணி வரை கூட பாராயணம் நடக்கும். விஜய தசமியன்று நடைபெறும் பூர்ணாஹுதிக்கு முன் பாராயணம் நிறைவு செய்வார்கள்.


4. ருத்ர யாகம் - மேடைக்கு நடுவில் 4 ரித்விக்குகள் ஹோமகுண்டத்தை சுற்றி அமர்ந்து, 11 முறை நமகம் சமகம் பாராயணம் செய்து ருத்ர ஹோமம் செய்வர்.


5. புராண இதிஹாச பாராயணம் -

அதற்கு பின்புறம், மூன்று பண்டிதர்கள் அமர்ந்து மஹா பாகவதம், தேவி பாகவதம் மற்றும் இராமாயணம் ஆகியவற்றை பாராயணம் செய்து கொண்டே இருப்பர்.


6. தேவி மஹாத்மிய பாராயணம்-

மேடையின் இடப்புறம் சத்ய சாயி பல்கலைக்கழக மாணவர்கள் அமர்ந்து, 700 ஸ்லோகங்கள் அடங்கிய தேவி மஹாதமியம் முறைப்படி பாராயணம் செய்வர்.

மேற்கண்ட அனைத்தும் விதிவத்தாக, ஹோம விதிகளின்படி முறையே நடைபெறும். ஹோமத்திற்கு தேவையான நெருப்பு கூட நவீன முறையில் தீப்பெட்டி கொண்டு ஏற்படுத்தாமல், பழங்கால முறைப்படி மரங்களை உரசி ஏற்படுத்தப்படும்.


மேற்கண்ட விபரங்களை 12.10.2018 அன்று கூறிய திரு. வேத நாராயணன் அவர்களின் உரையை கேட்க: 



ஓம் ஶ்ரீ யி வேத போஷனாய நம: 🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக