மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சியாய் ஆந்திர அரசால் ஏற்கெனவே ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம் உருவான நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எப்போதுமே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு சாலை சந்திப்புக்கு பகவானின் திருப் பெயரைச் சூட்ட விஜயவாடா மாநகராட்சி நகர மண்டலம் எலுரு சாலையில் உள்ள சீதாராம்புரம் சிக்னல் சந்திப்பின் பெயர் பகவான் ஸ்ரீ சத்யசாயி வட்டம் (Bhagavan Sri Sathya Sai Circle) என்று பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதாரத் திருநாளில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்மானம் விஜயவாடா முனிசிபல் கவுன்சிலில் முன்மொழியப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது!
நம் வாழ்க்கைப் பயணத்திற்கு வழிகாட்டி ஆசீர்வதிக்கும் பகவான் பாபாவின் திருநாமம் பயணம் செய்யும் பயணிகளின் கண்நிறைந்து நாவிலும் இனித்து, நலம் பெறச் செய்யட்டும்!
விழிப் பயணத்திற்கு சாயி ரூபம்! மொழிப் பயணத்திற்கு சாயி நாமம்! வழிப் பயணத்திற்கு சாயி மகிமை! அதில் கூட ஒரு மகிமை இணைகிறது! நமது அனைவர் நெஞ்சமும் ஆனந்தத்தில் நனைகிறது!
ஜெய் சாய்ராம்.
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக