தலைப்பு

வியாழன், 19 அக்டோபர், 2023

காப்பி பொடியா? கடவுளா? யார் பெரியவர்?

 
நம் அன்பு சுவாமி பக்தர்களிடம் பங்காரு உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்? என்பார்.

பக்தர்களும் மனம் நெகிழ்ந்து

உலகாயத ஆதாயங்களை கேட்டார்கள். சில கஷ்டங்களை தீர்க்க வேண்டுவர். சிலர் மட்டுமே சுவாமி தாங்கள்தான் வேண்டும் என்பார்கள். சுவாமி விடாமல் அவர்களிடம் ok, வேறு ஏதாவது கேள்? என்பார் பின்னால் ஓர் வலையுடன்.

இவர்களும் சுவாமி இந்த பிரச்சனை உள்ளது என்று கூறுவார்கள். சுவாமி உடனே அதை சரிசெய்வார்.

சுவாமி ஏக்கத்துடன் சொல்கிறார்:

எதையும் தரவல்ல கற்பக விருட்சமாக என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்கிறேன் உத்திரவாதத்துடன்.

ஆனால் கற்பக விருட்சத்திடம்

காபி பொடி கேட்பது போல

சாதாரண விஷயங்களை மட்டுமே அந்த பொன்னான வாய்பில் பலர் கேட்கிறார்கள் என்கிறார். 

சிலர் மட்டுமே சற்று உயர்வாக நீங்கள் வேண்டும் என்பார்கள். சுவாமி ok வேறு ஏதாவது கேள் என்றால் அவர்களும் தடம் மாறி விடுகின்றனர்.

அச்சமயத்தில் சுவாமி நீங்கள் மட்டுமே வேண்டும். அதுவே எனக்கு போதும். வேறெதுவும் வேண்டாம்,

என்ற பதிலை கூறும் பக்தனை தான் யுகயுகமாக தேடுகிறார்.

தேடிக்கொண்டிருக்கிறார் நம் அன்பு சுவாமி.


பின் குறிப்பு: கடவுளை விட கடவுள் உருவாக்கிய காபி தூள் மகத்தானதுதான். இத்தனை பேர் கேட்கிறார்களே!! 

✍️S.Ramesh Ex Convenor, salem samithy



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக