யாதுமாகி இருந்து அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்கிறான் கீதையிலே கண்ணன். ஆனால் அழைக்காமலேயே வந்து என்னை ஆட்கொண்டு பாம்பின் விஷக்கடியின் போது உயிரை மீண்டும் உடம்புக்குள்ளேயே அனுப்பிய ஸ்ரீ சத்ய சாயிபாபா (ஸ்ரீ சத்ய சாயி யுகம் பக்தர்களின் அனுபவங்கள் வியாழன், 9 டிசம்பர், 2021) இன்று என்னை கருவியாக்கி "சாயி குறள் அமுதம்" ஆக வடிக்கச் செய்துள்ளான்..!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் இரண்டடி குறள் பகவானின் அமிர்த மொழி மற்றும் அவரது வாழ்வினை வெளிச்சம் இடும் கலங்கரை விளக்காக வாழ்வெனும் படகில் தத்தளிப்பவர்களுக்கு உதவவேண்டும் என்ற பரந்த ஆன்ம நோக்குடன் இது வகுக்கப்பட்டுள்ளது!
முதல் அதிகாரம் ஓமென்ற பிரணவ ஒலியில் ஆரம்பித்து ஐம்பத்து நான்காவது அதிகாரம் ஆராதனா தினம் என முடிக்கப்பட்டுள்ளது. முதல் வரியில் நான்கு சீர்கள் என்றும் இரண்டாம் வரியில் மூன்று சீர்கள் என குறள்வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சீர்படுத்தி மாலையாக தொடுத்தவர் சங்கரன் சாய்ராம்.
பிரபஞ்சத்தையே ஒளிர வைக்கும் மந்திரமும்,
அனைத்து மதத்தினரின் மனசாட்சியும் பொதுவானதுமான
"அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்து! அனைவருக்கும் சேவை செய்!”
என்பதை வெளிச்சமிட்டும் மற்றும் உலக மாந்தர்களிடையே அமைதி நிலவிடச் செய்வதற்கான ஓர் அரிய ஆன்மீக முயற்சியே இது!
ஸ்ரீ சாயி வாழ்வையே முப்பாலாக்கி சமர்ப்பணம் செய்கிறோம். அனைத்திலும் உறைந்து அருள்செய்வாய்
"சத்யம், சிவம், சுந்தரம்" என்ற முப்பாலில் 54 அதிகாரத்தில் பகவானின் வாழ்க்கைதனை நல்முத்துக்களாக கோர்த்துளோம்.
ஓவ்வொரு பாலும் பதினெட்டு அதிகாரங்கள் என முப்பாலில் மொத்தம் 54 அதிகாரங்களும், ஓவ்வொரு அதிகாரத்திலும் 6 குறள் என மொத்தம் 54 x 6=324 குறள்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த நல் முயற்சி வெற்றியடைய பகவான் அருள் வேண்டியும் தங்கள் துணைவேண்டியும் இந்நூலான ஸ்ரீ சாய் அருளமுதத்தை சமர்ப்பிக்கிறோம்!!
(இந்தப் புத்தகத்தை Free'யாக Download செய்து அனைவரும் வாசித்து பேரிறைவன் பாபாவின் அருள் பெற்று அகமாற்றம் அடைய ஸ்ரீ சத்ய சாயி யுகம் சார்பாக வேண்டுகிறோம்!)
நூலாசிரியர் ந. அனந்தராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக