யாழ்ப்பாணத்தில் வலம்புரி பத்திரிகையில் எழுந்த வளமையான கட்டுரை இது!! இதில் பேரிறைவன் பாபா யார் என்பதும்? அவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும்? யாழ்ப்பாணத்தில் பாபாவை அறிய ஏன் சற்று தாமதமானது என்பதும் - மிக சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கிறது இதோ..!
சர்வ லோக நாயகன் இன்று பரப்பிரம்மமாக விளங்குகின்ற பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 91 ஆவது அவதார தினத்தில் வாழ்கிற நாம் எல்லாம் எத்தனையோ பிறப்புகளில் செய்த புண்ணியமே!
எனக்கு எங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம், நீயே நான் என்று உரைத்தான் , கடைக் கண்ணால் பாரையனே, ஊர் - உற்றார் - சுற்றம் - சீர் - செல்வம் - பதவி ஒன்றும் துணையில்லை! உன்னுள் நான் அடைக்கலம்! என்று யாழ்ப்பாண யோகர் சுவாமிகள் தமது நற்சிந்தனையில் எவ்வளவு தெளிவாக கூறியுள்ளார்!
கடவுள் தான் எமக்கு உற்ற நண்பன், மற்றைய எல்லாம் ஓடும் மேகங்களே (Passing Clouds)
பூர்ண அவதாரமான பகவானின் அன்பை நாம் உணர முடியுமே அன்றி அவரை அறிய முற்படுதல் என்பது பிரம்மா - விஷ்ணு - மகேஷ்வரர்களாலும் முடியாத காரியம்!
ஒருமுறை பேராசிரியர் மகாதேவன் என்பவர் யோகர் சுவாமிகளை பற்றி ஒருத்தராலும் எழுத முடியாது! இனியும் எழுத முடியாது அதைச் சொன்னால் இவர்களுக்கு விளங்குவதில்லை என்று கூறினார்!
ஒருமுறை கந்தசுவாமி அய்யா இரத்தின வடிவேல் அய்யா , வேத விற்பன்னர் இராசதுரை அய்யா போன்றோர்கள் தங்களது இந்திய தல யாத்திரையின் போது இளைஞராக இருந்த சுவாமியிடம் இறுதியாகச் சென்றபோது, கந்தசுவாமி அய்யா சுவாமியை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்
"சுவாமி! உங்களைப் பற்றி ஏன் 1965'ற்கு முன் எங்களால் அறிய முடியவில்லை?"
அதற்கு பகவான் பாபா
"யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய மகான் வழி நடத்திக் கொண்டிருந்ததில் அப்போது எனது பிரசன்னம் தேவைப்படவில்லை!" என்றார்.
இதையே யோகர் சுவாமிகளும் "இது மர்மம் - இது மக்களாலும் அறியொனா மர்மம்" எனப் பாடியுள்ளார்!
இன்று சர்வ மதப் பிரியன் , சர்வ லோக நாயகன் முழு மனித இனத்தையும் ஒரே குடையில் கொண்டு வந்து எங்கள் அன்பு தெய்வமான பாபாவின் பிரசன்னத்தை அதிகமாக உலகெங்கும் உணர்கின்றோம்!!
சுவாமியின் போதனைகள் எவராலும் இலகுவாக உணர முடியும்!
Help Ever - Hurt Never
Love All - Serve All என்று
சுவாமி அடிக்கடி கூறுவார்,
சத்தியம் எனது பிரச்சாரம்
தர்மம் எனது ஆதாரம்
சாந்தி எனது சுபாவம்
பிரேமை என்னுடைய சொரூபம்
இவற்றில் ஒன்றை கடைப்பிடியுங்கள்!!
நீங்கள் என்னுடையவராவீர்கள்!!
நான் உங்களுடையவராவேன்!!
சுவாமி எல்லோரிடமும் கேட்பது,
ஆத்ம விசுவாசத்தோடு சேவை செய்யுங்கள் , அதற்கு நீதி - நேர்மை - சத்தியத்தை ஆதாரமாகக் கொள்ளுங்கள்!
பூர்ண அவதாரமான பகவான் எப்பொழுதும் தமது இரு கரங்களையும் உயர்த்தி, நம்மை புன்முறுவலுடன் ஆசீர்வதிப்பார்!
வழக்கத்திற்கு மாறாக, 2011 - சித்திரை மாதம், நாலா புறமும் உள்ள பக்தரைப் பார்த்து , தமது இரு கரங்களையும் கூப்பினார்! அப்போது படம் எடுத்துக் கொண்டிருந்த சாயி சகோதரர் வேத நாராயணனின் புகைப்படக் கருவி (கேமரா) அவரை அறியாமலேயே கை நழுவியது! அப்போது பக்கத்திலிருந்த நண்பனிடம் , இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்று ஏங்கினார்! அவதாரங்களான ஸ்ரீராமர் - ஸ்ரீ கிருஷ்ணர் போல் சுவாமியும் தமது பௌதீக உடலை நீத்து எங்களுக்குத் தந்த செய்தி, "நீயும் நானும் ஒன்று!" என்பதாகும்!
நாமும் நமது மிருக நிலையில் இருந்து விடுபட்டு, தெய்வீகத்தை உணர முயற்சி செய்வதே, நாம் சுவாமியின் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலப் பொருளாக இருக்க, அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி பகவானை பிரார்த்தாப்போம்!!
எல்லா உலகமும் இன்புற்று வாழ்க!!
சமஸ்த லோகா சுகினோ பவந்து:
எழுதியவர் : ம. சிவயோக சுந்தரம், யாழ்ப்பாணம்
பேரிறைவன் பாபா நமது இதயத்தில் பக்தி யாழ் மீட்டிக் கொண்டே, அதர்ம எண்ணத்தில் இருந்து நம்மை மீட்டுக் கொண்டே, யாழ்பாணத்தில் மட்டுமல்ல நமது வாழ்க்கை நெடுக தன் பேரிருப்பு அலை வீசி தெய்வீகமாய் ஆன்மாவில் ததும்பிக் கொண்டிருக்கிறார்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக