நீங்கள் குறிப்பிடும் இரண்டும் உண்மையே! இதை நீங்கள் புரிந்து கொள்வதில் தான் முரண்பாடு இருக்கிறது! இவை இரண்டுமே உங்களுடைய மனநிலை வளர்ச்சியை பொறுத்தே விளங்கிக் கொள்ளப்படுகிறது!
உதாரணத்திற்கு: நீங்கள் எப்போது வந்தீர்கள்? எனும் என்னுடைய கேள்விக்கு... "இப்போது தான் வந்தேன் சுவாமி" என பதில் அளிக்கிறீர்கள்! நீங்கள் சொல்வது இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் உடலைத் தான் அல்லவா!
மற்றொரு உதாரணம்: உங்கள் தலை வலிக்கிறது என்கிறீர்கள்.. உங்கள் தலை, கால், கை என்றால் என்ன அர்த்தம்...? நீங்கள் தலை இல்லை என்று அர்த்தம் அல்லவா! புரிகிறதா?
உங்களுடைய கார் என்றால் கார் நீங்கள் இல்லை என்றுதானே அர்த்தம்! அப்போது நீங்கள் யார்? நீங்கள் "ஆன்மா" என்பதை சொல்லாமலேயே என்னுடைய கை வலிக்கிறது... அதாவது கைதான் வலிக்கிறது.. எனக்கு வலி இல்லை என்று பொருள்.. தேக உணர்வு இருப்பதால் வலியை நீங்கள் உணர்கிறீர்கள் .. அவ்வளவு தான்! ஆழ்ந்த தூக்கத்தில் ஏதேனும் வலியை உணர்கிறீர்களா? இல்லை! அப்போது நீங்கள் இருக்கவே செய்கிறீர்கள்! ஆனால் உங்கள் உடல் எங்கே? ஆக நீங்கள் வேறு இந்த உடல் வேறு என்று புரிகிறது அல்லவா!
தேக உணர்வோடு சொல்கிற போது.. "நான் இப்போது வந்தேன் சுவாமி!" என்பது சரியானது போல் "பிரம்மம் சத்யம் ஜகன் மித்யா" என்பதும் சரியே! இது துவைத உணர்வு!
ஆத்ம உணர்வில் நோக்கும் போது உங்களது கால் உங்களது கை , அதாவது கையும் காலுமே நான் அல்ல.. (நான் ஆன்மா ) என்பது சரி...அதுபோலவே "சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" என்பதும் சரியே! இதுவே அத்வைத நிலை!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 36)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக