ஒருவர் பாகவதத்தில் இறைவன் ஸ்ரீ பாலகிருஷ்ணனின் எண்ணற்ற குறும்புத்தனங்கள் தன்னுடைய பிரஜைகளின் மீது அவர் மகத்தான மகிழ்ச்சியாக பொழிந்ததை நாம் படித்துள்ளோம். அவ்வண்ணமே நமது இறைவன் ஸ்ரீ சாய் கிருஷ்ணரும் இத்தகைய லீலைகள் செய்வதில் விதிவிலக்கு காட்டியதில்லை. என்னால் எல்லாவற்றையும் ஞாபமாக சொல்ல முடியா விட்டாலும் குறிப்பாக இந்த கால்குலேட்டர் பற்றிய எனது அனுபவத்தை மறக்கவே முடியாது...
இவை எல்லாம் குறிப்பாக ஒரு புள்ளி விவர வகுப்பில் தான் ஆரம்பித்தது. நான் சில கணித வினாக்களுக்கு கால்குலேட்டரின் உதவியால் விடைகளை கண்டு பிடித்து எழுதிக் கொண்டிருந்தேன். வகுப்பு மேற்கொண்டு தொடங்கிய போது தான் என்னையே நான் கவனித்தேன். மிகச் சிறிய வழிமுறை கணக்கீடுகளுக்கு கூட நான் கால்குலேட்டரை மிகுதியாக பெருமளவு சார்ந்து இருந்தேன். அதையெல்லாம் மனதிலேயே வழிகளைச் சொல்லி என்னால் போட முடியும். என்றாலும் நான் பெருமளவு கால்குலேட்டரை சார்ந்திருந்தேன். உடனடியாக என் மனது நம் சுவாமி ஒரு அமெரிக்க பக்தரிடம் பின்வருமாறு சொன்னது மிக வேகமாக நினைவிற்க்கு வந்தது தற்போது உள்ள மனிதன் எவ்வாறு தேவையே இல்லாமல் கணினி மற்றும் கால்குலேட்டரை முற்றிலுமாக முழுவதுமாக சார்ந்து உள்ளான் என்று விவரமாக சொல்லி மேலும் இது அவனுடைய மூளை வளர்ச்சிக்கு பெருமளவு பின்னடைவை தருகிறது என்று.
இந்த சம்பவம் என் நினைவிற்கு வந்தவுடன் நம் சாய்பகவான் தற்சமயம் நாம் இவ்வாறு கால்குலேட்டரை உபயோகிப்பதை பார்த்தால் என்ன நினைப்பார் என்று எண்ணினேன்.
எல்லாவற்றிற்க்கும் நமது சாய் பகவான் உடனடியாகவும் சந்தேகம் தீரவும் பதில் அளிப்பவர். இந்த விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. இரண்டு ஒரு நாட்களுக்குப் பிறகு என்னுடைய கால்குலேட்டர் தொலைந்து விட்டது. அதைத் தேடாத இடமில்லை என்னுடைய அலமாரி முழுவதும் அங்குலம் அங்குலமாகத் தேடியும் பலனில்லை. யாரிடமாவது கைமாற்றாக கொடுத்தோமா அல்லது யாராவது நம்மிடம் இருந்து கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்களா? என்று இந்த மாதிரி பல வினாக்கள் என் மனதில் எழுந்தாலும் ஒன்றிற்கும் பதில் தெரியவில்லை. கடைசியாக இந்த கால்குலேட்டரை நமக்கு கொடுத்தது ஸ்வாமி. அதை திருப்பி நம் சாயி பகவானே எடுத்துக் கொண்டு விட்டார் என்ற முடிவுக்கு வந்தேன். ஏனெனில் இதன் மூலமாக அவர் எனக்கு ஒரு படிப்பினையை தர உள்ளார் என்று முடிவிற்கு நான் தள்ளப்பட்டேன்
புள்ளி விவர மாதாந்திர தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது நான் இப்போது வரைக்கும் கால்குலேட்டர் இல்லாமலேயே இருந்தேன். நானும் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு கால்குலேட்டர் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி அதன் தேவை எவ்வளவு அத்தியாவசியம் கட்டாயம் என்று இருந்தாலும் அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் மாதாந்திர தேர்வு எழுதப் போகிறேன் என்ற ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். இவ்வாறு ஒரு முடிவு எடுப்பது சரி என்று எப்போது ஒரு மனிதன் நினைக்கிறானோ அப்போது அவனுக்குள் பல சலனங்கள் தோன்றியது வழி தவறி போவதற்கும் தூண்டுகிறது. என்னுடைய சக மாணவனோடு நான் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த தொலைந்து போன கால்குலேட்டர் விவகாரம் முளைத்தது. இந்த விஷயம் மேற்கொண்டு பெரிதாகாமல் இருக்க நானே முன்வந்து யாரிடமோ கொடுத்திருக்கிறேன் போல் இருக்கிறது. கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட்டேன். ஆனால் எனக்கு கிடைத்த அறிவுரையோ மாதாந்திர தேர்வு நெருங்குவதால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் உடன் படிக்கும் சக மாணவர்கள் யாரிடமிருந்தாவது கால்குலேட்டரை வாங்கிக்கொண்டு மாதாந்திர தேர்வு எழுதி அது முடித்த பிறகு திருப்பி கொடுத்து விடலாம் என்று அறிவுரை சொல்லப் பட்டது. இது போதாதென்று இன்னொரு பக்கம் என்னுடைய வகுப்பிலே படிக்கும் மாணவர் இதே கருத்தையும் கூறி ஒரு கால்குலேட்டரையும் கொடுத்து விட்டார்.
எவ்வளவுக்கு எவ்வளவு என்னுடைய சாய் சகோதரர்கள் பெருமளவு என்னை சமாதானப்படுத்தி ஒரு கால்குலேட்டரை கொடுத்தாலும் கைமாற்றாக வாங்கிய கால்குலேட்டரை கொண்டு மாதாந்திர தேர்வு எழுத எனக்கு மனம் மனமில்லை. இருப்பினும் கால்குலேட்டர் என்ற ஒன்றை பயன் படுத்தாமலேயே அந்த மாதாந்திர தேர்வை மிகச் சிறப்பாக இறைவன் சாய் பகவானால் நான் எழுதினேன்.
நாட்கள் கடந்து சென்றன. நாளாவட்டத்தில் கால்குலேட்டர் என்ன ஆயிற்று என்பதை நான் முற்றிலுமாக மறந்து விட்டேன். இந்த கால கட்டத்தில் நான் செய்த ஒரு மிகப்பெரிய விஷயம் என்ன என்றால் என்னுடைய அலமாரிகளை கவனமாகவும் மறக்காமலும் பூட்டி வைக்கத் தொடங்கியது தான். இதன் அடிப்படையான உண்மையான காரணம் என்னவென்றால் தொலைந்து போன கால்குலேட்டரை எனக்குத் தெரியாமல் யாரும் திருப்பிக் கொண்டு வந்து அலமாரியில் வைத்து விடக்கூடாது என்பது தான்.
ஒரு வறண்ட பகல் பொழுதில் என் அலமாரியில் இருந்த ஒவ்வொரு கோப்புகளாக சரி செய்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட கோப்பை எடுத்தேன்... என்ன ஆச்சரியம் அதிலிருந்து தொலைந்து போன கால்குலேட்டர் பொத்தென்று கீழே விழுந்தது. இது என்னுடைய ஆர்வத்தை பெருமளவு தூண்டியது. இது எப்படி அந்த கோப்பிற்குள் சென்றது என்ற ஆர்வமிகுதி என்னை மிகவும் அலைக்கழித்தது. எனக்குள் தோன்றிய ஆர்வம் என்னவென்றால் இது நடந்திருக்க எப்படி சாத்தியம் என்பதே ஏனெனில் இந்த குறிப்பிட்ட கோப்பை கடந்த சில வாரங்களாக அடிக்கடி நான் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கும் மேலாக கால்குலேட்டர் தொலைந்து போனது முதல் மிகவும் கவனத்தோடும் கண்காணிக்கும் நோக்கத்தோடும் என்னுடைய அலமாரியை தவறி கூட பூட்டாமல் இருந்ததே இல்லை. நான் இல்லாது இருக்கும்போதும் பூட்டாமல் இருந்ததில்லை.
வெளிப்படையாக சொல்லப் போனால் கால்குலேட்டர் எவ்வாறு மர்மமான முறையில் தொலைந்து போனதோ அதே மர்மமான முறையில் அது மீண்டும் கிடைக்கப் பெற்றது. இந்த கிளைக் கதையின் மொத்த சாராம்சம் என்னவென்றால் குற்றவாளி தன்னுடைய இருப்பை தானே சுயமாக வெளிப்படுத்திக் கொண்டார் என்பதே.
மூலம் : சாய் நந்தனா 1995 (70வது பிறந்த நாள் விழா வெளியீடு)
மொழி மாற்றம் : ஆர். வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக