தலைப்பு

புதன், 27 மார்ச், 2024

பெண்மையாகவும் உருமாறி தயை காட்டிடும் இரு தாய்மை அவதாரங்கள்!


எவ்வாறு பெண் வடிவிலும் பெண்மைத் தன்மையிலும் தன்னை உருமாற்றிக் கொண்டு தனது பக்தர்களுக்காக இரண்டு அவதாரங்களும் அனுகிரகம் அளிக்கிறது.. சுவாரஸ்யமாக இதோ...!

அது துவாபர யுகம்ராதா துளசி விரதம் மேற்கொள்கிறார்அதனை அறிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் பசு பராமரிப்பாளரான ஒரு பெண் உருவில் வ்ருஷ பானு வீட்டுக்கு செல்கிறார்எப்படி அப்பெண்மணிகள் உடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு வருவார்களோ அச்சு பிசகாமல் அதே நேர்த்தியோடு உள்ளே நுழைகிறார்.. காலில் அவர்கள் பாணி கொலுசு.. கழுத்தில் அவர்கள் பாணியில் ஒரு மணி... நாசியில் முத்து மூக்குத்தி... அவரை கூர்ந்து பார்ப்பவர்களை அது சுண்டி இழுக்கிறதுஏன் அங்கே அவ்வுருவில் ஸ்ரீ கிருஷ்ணர் செல்கிறார் எனில்‌... அங்கே தான் ராதா துளசி விரதத்தை மேற்கொண்டிருக்கிறார்! *சட்டென ராதா திரும்பிப் பார்க்க... நிலாவின் ஒளி நதியில் திரும்பிப் பார்ப்பதைப் போல் ராதாவின் இதயத்தில் அலையாடுகிறது...*

முதல் பார்வையிலேயே தோழியே என்று அழைக்கும் அளவிற்கு அந்நியோன்யம் ஏற்படுகிறது! 

"தோழியேயார் தாங்கள்எங்கே வாழ்கிறீர்கள்உங்களை பார்த்தால் என் கிருஷ்ணன் நினைவு தான் மனதில் மோதுகிறது!" என்கிறார் ராதா மாதா! 

உடனே கோபிகையின் வடிவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு வெட்கச் சிரிப்போடு 


"என் பெயர் கோப தேவிநந்தரின் வீட்டிலிருந்து வடக்குப் பகுதியில் இருக்கிறது என் வீடுஎன் தோழி லலிதா உன்னைப் பற்றிச் சொன்னாள்.. ஆகவே உன்னை காண்பதற்கே வந்தேன்!என்கிறார் கோபிகை வடிவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர்! 

ராதையோ ஸ்ரீ கிருஷ்ணரை பற்றியே மற்றவரிடம் பேசிக் கொண்டிருக்க..

ஸ்ரீ கிருஷ்ணர் மீது ராதை கொண்ட அளவற்ற பேரன்பையும் பாசத்தையும் அசைத்துப் பார்ப்பது போல்...

" ராதாஇது உனக்கே நன்றாக இருக்கிறதாகிருஷ்ணன் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவன்அவ்வளவு தான்என்னவோ அவன் தான் சகலமும் என்பது போல் நீ ஏன் இப்படி கற்பனை செய்து கொள்கிறாய்அவன் நிறம் வேறு கருப்புஉவ்வாக்... அவன் செல்வ செழிப்பானவனும் இல்லை... ஆகவே சுய மரியாதை இல்லாத அவனிடம் நீ இத்தனை அன்பு வைத்திருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!என்கிறார் கோப தேவி வடிவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர்!

நொடித் தாமதமும் இல்லாமல்... " தோழிஅப்படி எல்லாம் பேசாதேகடவுளர்களே எனது கிருஷ்ணனின் பாதம் தீண்ட காத்திருக்கிறார்கள்என் கடவுள் அவன்அவன் நிரந்தரமானவன்கால நேர வர்த்தமான பேதங்களே அவனுக்கு இல்லைஎன் கிருஷ்ணனை கருப்பு என்றாய்கருப்பில் என்ன குறை?! அவன் கருப்பாய் இருப்பதால் தான்  அவனையே காண மனம் சுலபமாக குவிந்து போகிறதுவேறெந்த சிதறல்களும் இல்லைசிவனை போல தலையில் சர்ப்பம் அணிவான்வேற்று உலகத்தவர்ரிஷிகள்ஞானிகள் எல்லாம் அவன் காலில் விழ தவம் கிடக்கிறார்கள்நீ எப்படி என் கிருஷ்ணனை ஏழை என்று அழைக்கலாம்?! அது தவறுஅவன் பரமாத்மாவதாசூரன்பகாசூரன் , அகாசூரன்த்ரினாவர்தா , சகதாசூரன் , பூதனை போன்ற அரக்கர்களை சிரித்துக் கொண்டே வதம் செய்த தீராதி தீரன் எனது கிருஷ்ணன்..! ஆகவே எதையும் தெரிந்து கொள்ளாமல் நீ பாட்டுக்கு எதையாவது உளறாதே!என்கிறார் ராதா மாதா!

அதைக் கேட்டு முகம் மலர்ந்த கோப தேவி வடிவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் 



"இப்போது உன் குரல் அப்படியே வேத த்வனியாக என் காதில் ரீங்கரிக்கிறது அன்பே ராதா...! நீ சொல்வதை எல்லாம் உண்மை என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்நீ அடுக்கு அடுக்காக மகிமையைச்  சொன்ன அந்த ஸ்ரீ கிருஷ்ணர் நீ அழைத்தால் உடனே வருவான் போல் தெரிகிறதே!என்று ஆச்சர்யப்படுவது போல் மர்மப் புன்னகையோடு மாறுவேட ஸ்ரீகிருஷ்ணர் தெரிவிக்க.. ஆம் என்பதை வார்த்தையில் கூறாமல் அப்படியே ராதா மாதா தியானத்தில் ஆழ்ந்து போகிறார்... கண் வழி யமுனைச் சொட்டுக்கள்தன்னை மறந்து ஸ்ரீ கிருஷ்ண பிரேமையிலும் தியான வெப்பத்திலும் ஊறிப் போகிறார் ராதா! 

சற்று நேரம் கடந்து கண் திறந்து பார்க்கையில்... கோப தேவியாக வந்த ஸ்ரீ கிருஷ்ணர் தன் நிஜ வடிவை ராதை முன் அப்படியே காட்ட.. மேலும் கண் வழி கசிந்த யமுனைச் சொட்டுக்கள் அதிகமாகி அப்படியே ஸ்ரீகிருஷ்ணரின் காலடியில் விழுந்து அவரது பாதங்களை அது குளிப்பாட்டுகிறது! அது அப்படியே நீந்தி துளசிச் செடிகளுக்கும் சென்று சேர்கிறது!


(ஆதாரம் : கர்க்க சம்ஹிதா - பிருந்தாவன காண்டம்)


இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் பெண்ணுரு எடுத்திருக்கிறார்ஆணுரு - பெண்ணுரு யாவும் அவர் உரு என்கிற வண்ணம் அவர் புரிந்து வரும் மகிமை பற்பல...

 

அது ஆரம்ப காலம்.. பால சாயியாக சத்யா இருந்த காலகட்டம் 

பள்ளி கொண்ட பெருமாளான பாபா  உரவகொண்டாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்! அப்போது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம் தான் துவாபர யுகத்தில் புரிந்த அதே சம்பவம்! 

பள்ளித் தலைமை ஆசிரியர்அவர் பெயர் லஷ்மிபதிபள்ளிக் கூட கலை நிகழ்ச்சிக்காக அந்த காலக்கட்டத்தில் புகழ் பெற்ற 'நாட்டிய மயூரிருஷ்யேந்த்ர மணியை பள்ளியின் கலை விழாவுக்காக அழைத்திருக்கிறார்அதன் மூலம் வரும் நன்கொடை வைத்து பள்ளியை மேலும் சீரமைக்கலாம் எனும் நியாயமான திட்டம் அவருக்கு...! ஆகவே "ருஷ்யேந்த்ர மணி ஆடுகிறார்!என தெருவுக்கு தெரு விளம்பர நோட்டீஸ்கள் விநியோகம்ஏகக் கூட்டம் வரும் எனும் சூழ்நிலை.. கூட்டம் வரும் ஆனால்ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலை ஆகையால் ருஷ்யேந்த்ரமணியோ வரவில்லை... தலைமை ஆசிரியர் லஷ்மிபதியோ அதிர்ச்சிபதியாகி விடுகிறார்பள்ளி மேம்பாட்டின் மீது இடி விழுந்ததைப் போன்ற துக்கம் அவருக்கு.. அப்போது லஷ்மி பதியை தேற்ற உண்மையான லஷ்மி பதியான பாபாவே சென்று 

"சார்கவலையோ பயமோ வேண்டாம்விழா குறித்த தேதியிலும் நேரத்திலும் நடக்கும்... நானே ருஷ்யேந்த்ர மணி போல் ஆடிவிடுகிறேன்!என்கிறார்! 

அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் லஷ்மி பதி எனும் ஆச்சார்யர் ஆச்சர்ய'ராக மாறுகிறார்!  சத்யம் சொல்வது சாதாரண செயல் அல்ல.. ருஷ்யேந்த்ர மணி சாதாரண நடனக் கலைஞரும் அல்ல.. மேடையிலேயே தட்டில் நின்றுதலையில் பாட்டிலை தாங்கி என பல சர்க்கஸ் காட்டியே நடனமாடும் அசத்தல் கலைஞர் அவர்எப்படி இது சாத்தியம்அவருக்கு ஒன்றும் புரியவில்லை... சரி என சத்யத்திடம் ஒப்புக் கொள்கிறார்!

என்னாகுமோஏதாகுமோஎன்று ஒரு பக்கம் பதற்றம்அடி வயிற்றில் புளியைக் கரைக்கிறது தலைமை ஆசிரியருக்கு...

அன்றைய நாள் - ஆட்ட நாள்!

ஆட்ட நாயகி வராததால் ஆட்ட நாயகனே ஆட்ட நாயகி போல் வேடம் அணிகிறார்!



சித்ராவதி அலைகளைப் போல் நீண்ட புடவையைச் சுற்றி சுற்றி சத்யத்தின் சிறிய இடுப்பில் கட்டப்படுகிறதுஎன்னென்ன அலங்காரம் ருஷ்யேந்த்ர மணி செய்வாரோ அதை அப்படியே செய்து கொள்கிறார் பாபா! 


மேடைக்கு வருகிறார் பாபாஅச்சு அசல் ருஷ்யேந்த்ர மணி போல... கைத்தட்டல் வானை பிளக்கிறது... அது சத்யம் என்று யாரும் சத்யமாக கண்டு பிடிக்கவே முடியவில்லை.. சிறப்பு அமைப்பாளரான பிரிட்டிஷ் கலெக்டர் ஹர்ஸ்லேஅவருக்கும் அது ஒரு மாணவன் என்று தெரியவில்லைடிக்கட் வாங்கிய கூட்டம் குவிகிறதுஆட்டம் ஆரம்பமாகிறது.. எப்படி ருஷ்யேந்த்ர மணி ஆடுவாரோ அச்சு அசல் அதே முகபாவனைஅதே ஸ்டைல் , அதே நளினம் பாபா ஆடுகிறார்... பரவசமாக ஆகிறார்கள் பார்வையாளர்கள்நடனத்தின் இடையே ருஷ்யேந்த்ர மணி வேஷத்தில் இருந்த பாபாவின் தலையில் தலைமை ஆசிரியர் ஒரு பாட்டில் வைக்கிறார்... பிறகு ஒரு தட்டு.. அதற்கு மேல் விளக்கு வைக்கப்படுகிறது... 

அப்படியே எதுவும் கவிழாமல் சத்யம் ஆட ஆட.. கவிழ்ந்து போகிறது ! எதுபாட்டிலாதட்டா?  இல்லை ! பார்ப்பவர்களின் மனம்அப்படியே கீழே குனிந்து தனது இமையால் தரையில் இருந்த ஊசியையும் எடுக்கிறார் பாபாபார்ப்பவர்களுக்கு புல்லரிக்கிறது! கைத் தட்டல் காற்றைக் கிழிக்கிறதுகைகளே கண்ணிப் போகும் அளவிற்கு கைத் தட்டல்! ஆட்டம் முடிய அடை மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கிறது! 

தலையை ஆசிரியர் கண்ணில் ஆனந்த நீர்அவருக்கு மட்டுமே தெரியும் அது ருஷ்யேந்த்ர மணி இல்லை பாபா என்று...!

பிறகு பிரிட்டிஷ் கலெக்டர் பரிசாக மெடாலியனை குத்தி விடுகிறேன் என்று அடம் பிடிக்கிறார்பாபாவோ கைகளிலேயே கொடுத்து விடுங்கள்.. நான் இப்போது ருஷ்யேந்த்ர மணி என்று பாரத கலாச்சாரம் பேசுகிறார்!

"ஏய் சத்யம் அவர் கலெக்டர் ! அப்படி எல்லாம் பேசாதே!" என்று தலையை ஆசிரியர் சைகை காட்ட..‌. கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த நேதாஜி போல் பாபா அந்த பிரிட்டிஷ் கலெக்டரிடம் உறுதியாகச் சொல்ல.. பார்வையாளர்களும் "கையில் கொடுங்கள்கையில் கொடுங்கள்!" என்று ஆமோதிக்க.. மாறு வேடமணிந்த பாபாவின் கையில் கொடுக்கிறார் கலெக்டர்!


அடுத்த நாள் கடப்பா மாவட்ட தலையைச் செயலாளர் "ருஷ்யேந்த்ர மணி ஆட்டத்தால் தான் நமக்கு போதுமான பணம் சேர்ந்து பள்ளிக் கூட மேம்பாட்டிற்கு இப்போது உதவப் போகிறது... ஆகவே அவர்களுக்காக ஒரு விலை உயர்ந்த  புடவை வாங்கி வந்திருக்கிறேன்ருஷ்யேந்த்ர மணி எங்கே?" என்று விசாரிக்க.. சத்யமோ அரைக்கால் பேன்ட் சட்டையோடு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க..‌ என்ன பதில் சொல்வார் தலைமை ஆசிரியர்?!!!

ஓடிக் கொண்டிருந்த சத்யத்தை ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்த...

'அவனை தடுக்காதீர்கள்அவன் தான் நேற்று ருஷ்யேந்த்ர மணியாக உங்கள் முன் மேடையில் ஆடியது!என்று தலைமை ஆசிரியர் அந்த பரம ரகசியத்தை போட்டு உடைக்க... அனைவர் முகத்திலும் ஒரே ஆச்சர்ய ரேகைகள்நம்பவே முடியாத அதிர்ச்சியோ அவர்களின் நாடி நரம்புகளில் முறுக்கேறுகின்றன...

பிறகு அந்த தலைமைச் செயலாளர் கடப்பா ராமசுப்பம்மா "ஆஹாஎன் மகனேஇந்த சின்ன வயதில் இப்படி ஒரு திறமையாஎன்ன ஒரு கௌரவத்தையும் பெருமையையும் இந்தப் பள்ளிக்கு நீ சேர்த்திருக்கிறாய்!! உன்னைப் போல் இப்போது யார் இந்த தேசத்தில் இருக்கிறார்கள்!!!என சத்தியத்தை உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்! 

இதனை பாபாவும்  நிகழ்ந்த இந்த ஆச்சர்ய சம்பவத்தை ஒருமுறை தனது பக்தர்களோடு சுவாரஸ்யமாக விவரித்தும்  இருக்கிறார்!

அப்படி ஒரு ஆச்சர்ய நடனம் பாபா ஆடியது அப்போது தான் என்றில்லை.. காளிங்க நர்த்தனமே ஆடியவருக்கு...  காலியான மேடையில் ஆடுவதெல்லாம் கை வந்த கலை!


அதே போல் ஒருமுறை காயம் பட்ட ஒரு பெண்மணி பிரசவ வலியால் துடிதுடிக்கிறார்பாவம் கவனிப்பார் அற்ற பெண் அவர்அவளை ஸ்ரீ குளம் எனும் ஊரில் பார்த்த சுவாமிஜி காருண்யானந்தர் தனது சேவை ஆசிரமம் இருக்கும் இடமான ராஜமுந்திரிக்கு அழைத்து வருகிறார்ஜீவகாருண்ய சங்கத்து மருத்துவ மனையில் அந்தப் பெண்மணிக்கு முதல் உதவி செய்து‌... ஐந்து நாட்களுக்குள் பிரசவம் ஆகிவிடும் என மருத்துவர் ஆசரீரி பேச... பாபாவை பிரார்த்தனை செய்தவாறே அவளின் கர்ப்ப பாரத்தையும் அவரது கவலை பாரத்தையும் பாபாவின் பாதார விந்தங்களில் இடுகிறார்!

அடுத்த நாள் அவருக்கு மருந்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு! "சீக்கிரம் வாருங்கள்!" என... வந்து பார்த்தால் .. நர்ஸ்களே இல்லைஆனால் பிரசவம் ஆகி இருந்தது... யார் பிரசவம் பார்த்ததுஎன்று கேட்டபடி ஆச்சர்யப்படுகிறார் சுவாமிஜி!

பிள்ளைப் பெற்ற அந்தப் பெண்மணியோ 2 மணிநேரம் என் கூடவே ஒரு பெண்மணி இருந்து பிரசவம் பார்த்தாள் என்கிறார் ! அவளின் அடையாளத்தை விசாரித்த போது..

 "அதோ அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தான் எனக்கு பிரசவம் பார்த்ததுஅப்படித் தான் அதே தான் முகம்தலைமுடியோ அதே போல் புஸ் என்று இருந்ததுஎன்று அந்தப் பெண்மணி பாபா படத்தை சுட்டிக் காட்டியபடி தெரிவிக்க... 

ஒரே நேரத்தில் பிரவேசமும்பிரசவமும்பரவசமும் திரிவேணி சங்கமமானது!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 153 - 157 | Author : Dr. J. Suman Babu ) 


நம்மை கண்டிக்கும் போது தந்தையாகவும்...நமக்கு கருணை காட்டும் போது தாயாகவும்... அறிவுரை வழங்கும் போது குருவாகவும்... நம்மோடு ரகசியங்கள் பேசும் போது தோழனாகவும்...நமக்காக திட்டங்கள் வகுக்கிற போது தலைவனாகவும்சேவையாற்றும் போது சராசரி தொண்டனாகவும்நாம் தியானிக்கும் போது சாட்சாத் இறைவனாகவும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே யுகந்தோறும் திகழ்கிறார்!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக