தலைப்பு

புதன், 31 ஜனவரி, 2024

இந்து மதத்தில் நாம் வர்ணாசிரமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் தான் அது பலவீனமாகி விட்டது என்று கருதுகிறேன். மற்ற மதங்களில் இப்படிப்பட்ட பிரிவு இல்லை... அப்படி இல்லாது போயிருந்தால் இந்து மதம் நமக்கு இன்று அதிகப் பலன் தருவதாக அமையும் அல்லவா?

'வர்ணாசிரமம்' என்பது உலகில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக ஏற்பட்டது! ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதற்காக ஏற்பட்டதல்ல... இந்த முறையினால் ஒவ்வொருவனும் தனக்கு ஏற்பட்ட கடமையைச் செய்கிறான்... மற்றொருவனுக்கு உண்டான வாழ்க்கையில் அவன் குறிக்கிடுவதில்லை... அதனால் சமுதாயம் சிக்கல் இல்லாமல் ஓடுகிறது...ஒவ்வொரு தனிமனிதனும் பொதுவாக சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறான்... இது மதத்துக்கு உரிய சிறப்பு!

உலகத்தில் இந்த அமைப்பு மதத்தில் இல்லாவிட்டாலும் உலகத்தில் இருக்கிறது! குறிப்பிட்ட சிலர் மதத்தில் உள்ள கோட்பாடுகளின்படி வழிபடச் சொல்லித் தருவது, மற்ற மக்களுக்காக பிரார்த்தனை செய்வது, நல்லொழுக்கம் போதிப்பது... இவற்றில் ஈடுபடுகிறார்கள்... இந்த சிலர் சிக்ஷக (குணப்படுத்தல்) வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்... 

சிலர் வியாபாரம்,தொழில் செய்து பொருள் ஈட்டுவது இப்படி ஈடுபடுகிறார்கள்... இவர்கள் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

வேறு சிலர் சண்டை போடவும் , ஆயுதங்களை இயக்கவும் பழகித் தேர்ச்சிப் பெறுகிறார்கள்... இவர்கள் ரக்ஷக (காக்கும்) வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். 

மற்ற தொழில்களை பலரும் செய்கிறார்கள். இப்படிப் பணி செய்பவர்கள் சிராமிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். 

இப்படிப் பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்கு நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது மட்டுமே குறியாக இருக்கிறது! எப்படி?

அந்த நாட்டை எதிர்த்து இன்னொரு நாடு சண்டைக்கு வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம்... அப்போது என்ன செய்கிறார்கள்? 

நாடு அழிந்து விடக் கூடாது என பிரார்த்தனை செய்கிறான்...

சிரமப்பட்டு உணவையும் உடையையும் தேடிக் கொண்டு வந்து விற்கிறான்... 

எல்லைப் பகுதியில் போய் சண்டை போடுகிறான்...

விபத்துகள் நேரும் இடத்திற்கு விரைந்து சென்று உதவிப்பணி செய்கிறான்...

ஆக செய்யும் காரியங்களுக்கு ஏற்ப பிரிவுகள் இருந்தாலும் அத்தனை பேரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் எனும் பொது நோக்குடனேயே செயல்படுகிறார்கள்!

இப்படிப் பொது நன்மையை மனதில் வைத்துக் கொண்டால் இந்தப் பிரிவுகள் நம்மைப் பிரிக்காது! 

இன்று வர்ணாசிரம தர்மம் சரியாகச் செயல்படவில்லை! அதில் அனாவசியமான வேற்றுமைகளைப் புகுத்தி விட்டனர்... அதனால் அது நமக்குச் சரியாகப்படவில்லை... சரியாகக் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் ஒரு கொள்கை தவறானது என்று சொல்வது நியாயம் இல்லை!

ஆதாரம் : சத்திய தரிசனம் / பக்கம் : 7/ தொகுப்பு : எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்/ வெளியீடு: நர்மதா பதிப்பகம் (1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக