தலைப்பு

வெள்ளி, 15 மார்ச், 2024

உன்னத பாபாவுக்கு நன்றி! உலக பக்தர்களுக்கும் நன்றி!


• 1 Million+ Pageviews(பார்வைகள்)
• 120 தேசங்கள் தாண்டிய பல லட்சம் பார்வையாளர்கள்!
• 1600 மேலான அரிய தமிழ் பதிவுகள்!

- 

ஸ்ரீ சத்ய சாயி யுக BLOG'கின் சர்வ தேச யுகப் புரட்சிக்கு உலகளாவிய தமிழ் பேசும் சாயி பக்தர்களாகிய நீங்களே முழுமுதற் காரணம்!

பேரிறைவன் பாபாவின் பரிபூரண சங்கல்பப்படி இயங்கி வரும் ஸ்ரீ சத்ய சாயி யுகம் என்பது தமிழ் பேசும் கடைசி சாயி பக்தர் வரை இணைக்கின்ற தெய்வத் திருப்பாலம்!

சமூக வலைதளங்கள் எல்லாமே ஆங்கில மயமாய் இருந்து வந்த காலகட்டத்தில் தேனினும் இனிதான நமது தாய்மொழியான தமிழில் முழு வீச்சோடு முதன்முறையாக  பேரிறைவன் பாபாவின் மகிமையை இன்னும் நெஞ்சிற்கு நெருங்கிய வண்ணமாய், தன்னலமற்ற தூய சேவையே திண்ணமாய், சாயி பொக்கிஷங்களை உலக சபையேற்றும் எண்ணமாய் , ஸ்ரீ சத்ய சாயி யுகம் என Whatsapp Group துவங்கி, அது BLOG'காக விரிந்து, Youtube Channel'லாக பரந்து பாபாவின் அண்டசராசர அருளை இதோ அனைத்து ஆன்மாவிலும் அள்ளித் தெளித்து வருகிறது! இப்படி எந்த ஒரு மன பேதமே இல்லாமல் பாபாவை வழிபட்டு அவர் வழி நடக்கும் அனைவரும் சாயி குழந்தைகள் என்ற மிகப் பரந்து விரிந்த உயரிய ஆன்மீக நோக்கத்தில் நாள்தோறும் தூய சாயி சேவைகளை டிஜிட்டலில் ஆற்றி வருகிறது. 

ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் ஈடுபட்டு தன்னலமில்லாமல் பாபாவுக்காகவே உழைக்கும் அனைத்து உயரிய‌ சாயி ஆன்மாக்களின் திருப்பாதங்கள் வணங்கி... மேலும் பரந்து வரிந்த பல மில்லியன் பார்வைகளோடு அனைவரும் சேர்ந்தே பயணிப்போம்!


நமது ஒற்றுமையே! பாபாவின் மகிமை!

நமது அன்பே! பாபாவின் வலிமை!

நமது சேவையே! பாபாவுக்கான நமது நன்றி காணிக்கை! 

-- ஸ்ரீ சத்யசாயி யுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக