மனசாந்தியை கல்வி அளிப்பதில்லை. 18புராணங்கள் எனும் அஷ்டாதச புராணங்களை இயற்றிய வியாச முனிவருக்கும் மனசாந்தி ஏற்படவில்லை! இறுதியில் நாரதரின் ஆலோசனைப்படி பாகவதம் எழுதியபின் தான் அவருக்கு மனசாந்தி கிடைத்தது! ஆகவே கல்வியால் மட்டுமே மனசாந்தி கிடைக்காது! பணம், அந்தஸ்து, அதிகாரம் இவற்றால் கூட மனநிம்மதி கிடைக்காது!
ஒரு பொருளோ ,ஓர் இடமோ, ஓர் செல்வமோ அல்லது ஒரு தனிமனிதரோ மன அமைதியை ஒருவருக்கு அளித்துவிட முடியாது! காரணம் என்னவெனில் : சாந்தி என்பது வெளிப்புறத் தோற்றத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல!
மனநிம்மதி இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அளவுக்கு மீறிய ஆசைகள்! அதனால் தான் எப்போதும் சொல்கிறேன் "Less Luggage More Comfort - Make Travel a Pleasure" என்ற வாசகத்தின்படி நடந்து கொள்ளுங்கள் என்று... ஆகவே luggage குறைவாக இருப்பது நலம்! எனவே ஆசைகளுக்கு வரம்பு மிகவும் அவசியம்!
கோடி பணம் இல்லையே என்று ஏங்காதீர்கள்! கூழுக்காவது இருக்கிறதே என மகிழ்ச்சி அடையுங்கள்!
கார் இல்லையே என்று ஏங்காதீர்கள்!கடவுள் தந்த கால்கள் இருக்கின்றதே என்று சந்தோஷப்படுங்கள்!
சந்தோஷம் - சாந்தி எல்லாமே திருப்தி அடைவதில் தான் உள்ளது!
பெரும் செல்வந்தர் யார் தெரியுமா?
திருப்தி உடைய மனிதனே பெரும் செல்வந்தர்!
பரம ஏழை யார்?
மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்பவனே பரம ஏழை!
எல்லோரும் என்னிடம் "I want peace Swami!" (எனக்கு அமைதி வேண்டும்) எனக் கேட்கிறார்கள்...
வேண்டும் என்ற ஆசையையும் எனக்கு என்ற ஆணவத்தையும் விட்டுவிட்டால் போதும்... அமைதி உங்களுக்கு உள்ளே எப்போதும் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கிறது!
(ஆதாரம்: சத்ய உபநிஷதம் | பக்கம் : 75 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக