தலைப்பு

சனி, 12 அக்டோபர், 2019

பணத்தின் அளவு vs பணத்தின் தரம் - ஸ்ரீ சத்ய சாயுடன் பேராசிரியர். சுதிர் பாஸ்கரின் அனுபவங்கள்


ஒருநாள் சுவாமி பேராசிரியர் சுதிர் பாஸ்கரிடம் "நீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?" என்று கேட்டார். என்ன பதில் சொல்வதென்று குழப்பமடைந்து ஐயா அமைதியாக இருந்தார். சுவாமி மீண்டும் அவரை பார்த்து "உன்னுடைய வேலை நீ வாங்கும் சம்பளத்திற்கு ஈடானதா?" என்று கேட்டார். திரும்பவும் ஐயா மௌனமானார். சுவாமி அதை அங்கேயே விட்டு விட்டு நகர்ந்தார்.

சுவாமி ஏன் இந்த கேள்விகளை கேட்டார் என்று பேராசிரியர் ஐயா திரும்பத்திரும்ப யோசித்தார்.. காலம் கடந்தது. பிறகு ஒருநாள், தர்ஷன் நேரத்தில் சுவாமி பின்னாடியே சென்று கடிதங்களை வாங்கும் வாய்ப்பு சுதிர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு கிடைத்தது. அவ்வாறு பின்னாடி நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு நாள், கடிதத்தை சுவாமியிடம் கொடுக்க பெரும் முயற்சி எடுக்கும் ஒரு பக்தனை கண்டார்.

 தர்ஷன் நடந்து கொண்டிருக்கும்போது, அந்த பக்தர் முதல் வரிசைக்கு அதாவது சுவாமிக்கு அருகில் செல்ல முயற்சித்தார். இதை ஐயா அவர்கள் பார்த்துவிட்டு, எச்சரிக்கை ஆனார். தரிசன நேரத்தில் சுவாமிக்கு சேவை செய்வோரும், சுவாமியுடன் நடந்து செல்வோரும், மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். எந்த பக்தராவது சுவாமிக்கு அருகில் வர முயற்சி செய்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எப்படியோ அந்த பக்தர் முதல் வரிசைக்கு சென்று, சுவாமியிடம் கடிதத்தை தருவதில், அவர் வென்று விட்டார். சுவாமி இந்த கடிதத்தை தனக்குப் பின்னே நிற்கும் சுதீர் பாஸ்கர் ஐயாவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

திடீரென்று இந்த பக்தர் சுதிர் பாஸ்கர் ஐயாவின் கைகளை பிடித்துக்கொண்டு, காதில் ஏதோ முணுமுணுத்தார். "சாய்ராம்,ஜாக்கிரதை... இந்த கடிதத்தில் 20 லட்சம்  கொண்ட டிராப்ட் இருக்கிறது" என்றார். சரி என்று இந்த கடிதத்தை மற்றொரு கடிதத்துடன் வைக்க ஐயா முயற்சித்தார். அப்போது சுவாமி திடீரென்று திரும்பி, ஐயாவின் கைகளில் இருந்த கடிதத்தை பிடுங்கி, அதை கொடுத்த பக்தரின் தொடையில் திரும்ப தூக்கிப் போட்டுவிட்டு, பின்னர் அந்த இடத்தை விட்டு சுவாமி நகர்ந்தார். அந்த பக்தர் அதிர்ந்து போனார். திரும்பவும் சுவாமியிடம் கொடுக்க முற்பட்டார். ஐயா இதை புறக்கணித்துவிட்டு சுவாமி பின்னே நடக்க முயன்றார். ஐயாவுக்கு நன்றாக தெரியும் ஒருவர் கடவுளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றால், உலகாயத ஈர்ப்பு மற்றும் கவன சிதைவிற்கு குருடனாக இருந்து புறம் தள்ள வேண்டும் என்று.

சுவாமி முன்னேறி நடந்து செல்கையில் கூட்டத்தில் இருந்த இளம் பக்தனிடம் இருந்து கடிதத்தை பெற மிகவும் ஆர்வமாக இருந்தார். அதைவாங்கி ஐயாவிடம் கொடுத்து, இந்த கடிதத்தை மிகவும் பத்திரமாக வை என்று கூறினார். தரிசன நேரம் முடிந்தவுடன் சுதீர் பாஸ்கர் ஐயாவிடம், அந்த கடிதம் எங்கே? என்று சுவாமி கேட்டார். தனது பாக்கெட்டில் தனியே வைத்திருந்த ஒரு பழுப்பு நிற உரையை சுவாமியிடம் கொடுத்தார். சுவாமி அதை திரும்பவும் ஐயாவிடம் கொடுத்து, "இதை திறந்து உள்ளே என்ன உள்ளது என்று பார்" என்று கூறினார். அந்த உரையில் ஒரு சின்ன துண்டு காகிதம் இருந்தது. ஸ்டேட் பாங்க் வங்கியில், ஸ்ரீசத்யசாய் நிறுவனத்திற்கு ரூபாய் 10 செலுத்திய சாட்சி காகிதம் அது. இந்த தொகையை செலுத்துவதற்காக, நேற்று இந்த பக்தர் மதிய உணவை சாப்பிடவில்லை என்று ஐயாவிடம் சுவாமி கூறினார்.. "தானகண்ணா நாக்கு இது முக்கியம்"_ அதைவிட இது எனக்கு முக்கியம் என்று சுவாமி கூறினார். ஐயாவுக்கு நன்றாக தெரியும், அது என்று சுவாமி குறிப்பிடுவது அந்த 20 லட்சம் தானம் செய்தவரை தான் என்று...

 என்னை போன்ற சக பக்தர்களே, இதற்கடுத்து சுவாமி கூறிய வார்த்தைகள் மிக மிக முக்கியமானவை, மற்றும் நம் அனைவருக்கும் ஒரு பாடம் ஆகும். உங்களுடைய சம்பளத்தை நான் இதைப் போன்ற பணத்திலிருந்து தான் தருகிறேன் என்று சுவாமி அய்யாவிடம் கூறினார். இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்! என்றும் கூறினார். இப்போது ஐயாவிற்கு புரிந்துவிட்டது, சுவாமி ஒரு வருடம் முன்பு நீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்? உன்னுடைய வேலை நீ வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக இருக்கிறதா? என்று ஏன் கேட்டார் என்று. இந்த சம்பவம் ஐயாவிற்கு ஒரு பாடத்தை தந்தது. ஒரு பக்தன் ஒருவேளை உணவை இழந்து எனக்கு ஊதியம் கொடுக்கும் அளவிற்கு நான் உழைக்கிறேனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். ஐயா வாங்கும் சம்பளம் அதில் குறிப்பிட்ட பணத்தை விட சிறந்ததா? ஏனென்றால் பக்தனின் புனிதத்துவம் இதில் பொதிந்திருக்கிறதே!

ஆதாரம்: http://aravindb1982.blogspot.com/2015/03/quantity-of-money-vs-quality-of-money-sathya-sai-sudhir-bhaskar.html?m=1

மொழிபெயர்ப்பு: D. காயத்ரி சாய்ராம், காஞ்சிபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக