தலைப்பு

புதன், 31 ஜனவரி, 2024

🚉 மீண்டும் பிரசாந்தி நிலையத்தில் ரயில்கள் இயங்கும்!!

சாய்ராம்... புட்டபர்த்தி அருகே உள்ள சுரங்கப்பாதை வேலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலைய ரயில் நிலையத்திற்கு வராமல் மாற்றப்பட்ட ரயில்கள், நாளை பிப்ரவரி -1,முதல் பழையபடி மீண்டும் புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி  -ரயில் நிலையம் வழியாக  இரண்டு மார்க்கங்களிலூம் (up & downward routes) நின்று செல்லும். 

நாளை( பிப்ரவரி 1) முதல் வழக்கமாக பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம் ரயில் மார்க்கமாக செல்லும் உத்யன், பிரசாந்தி, ராஜ்தானி, கே.கே எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரயில்களும், பழையபடி ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சேரும்,  அங்கிருந்தும் புறப்பட்டு செல்லும். 

தற்போதைய ரயில்வே குறிப்பின்படி பிப்ரவரி 9 முதல் அனைத்து ரயில்களும்( குர்லா எக்ஸ்பிரஸ், தர்மாவரம் பாசஞ்சர்  ரயில்  உள்பட) வழக்கம் போல், பழையபடி புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாயி பிரசாந்தி நிலையம் வழியாக இயக்கப்படும் என்று தெரிகிறது.

சுவாமியின் பொற்பாதங்களில், நம் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்வோம். ஜெய் சாய்ராம்


புட்டபர்த்தியிலிருந்து புறப்படும், நின்று செல்லும் ரயில்களின் விவரங்கள்! (Updated: January 2024)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக