தலைப்பு

புதன், 3 ஏப்ரல், 2024

பாபா எனும் ஜோதியில் கலந்தார் பரம பக்தர் Prof. அனில் குமார்!

பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர். பாபாவின் அண்மை என்னும் அருள் நிழலை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து, மகிழ்ந்து, அந்த சுவையை அனைவரிடமும் சத்சங்க அனுபவமாகப் பகிர்ந்து வாழ்ந்தவர். பரமனும் பர்த்தியை விட்டுஅகலவில்லை , பக்தரும் தமது இறுதிவரை எங்கும் செல்லவில்லை. ஐயனின் இணையடி நிழலில் ஒன்றாகக் கலந்து விட்டார் Prof. அனில் குமார் காமராஜூ அவர்கள்.


தம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ சத்ய சாயி பாபா  அவர்களின் சேவையில் இணைந்து , மனம் தனில் கனிந்து, பாபா பாபா எனப் பேச்சிலும் மூச்சிலும் வாழ்ந்த Prof. அனில் குமார் காமராஜூ அவர்கள், ஐயனின் திருவடி நிழலில்  இன்று இணைந்துவிட்டார். உடல் நிலை காரணமாக அவர் பகவானின் உயர் சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைக் கவனமுடன் கண்காணித்து வென்டிலேட்டர் உதவியுடன் சிறப்பு சிகிச்சை அளித்தனர். ஆயின் பகவான் தமது அத்யந்த பக்தரை தம்மிடம் அழைத்துக் கொள்ள திருவுள்ளம் கொண்டார் போலும்.

இன்று(03-04-2024)  காலை 11.10 மணிக்கு, அனுமான் சாலீசா ஒலி  பரப்பு ஹாஸ்பிட்டலில் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது வாழ்வு முடிந்தது.பகவான் பாபாவுடன் பின்னிப் பிணைந்த அவரது வாழ்வும், சேவையும் பக்தர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ளது. 

அவரது வளமையான சொல் ஆற்றல், திறமையான மொழி பெயர்ப்புகள், ஏற்றமான எழுத்து ஆற்றலில் உருவான பல சாயி இலக்கியங்கள், கபடமில்லா கல கல சிரிப்பு, கணம் தோறும் சாயியின்  நினைப்பு.

சென்று வாருங்கள் Uncle

என்று காண்போம் இனி.

🪷 ஆஞ்சனேயர் போல் அகலாமல் பக்தி செய்தவர், அனுமான் சாலீசா கீர்த்தனம் ஒலிக்க தமது இறுதி மூச்சை விட்டது , தற்செயலானதல்ல. அது அவர் யார் என்று நமக்கு இறைவன் சுட்டிக் காட்டிய நிகழ்வேயாகும். 

தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக