தலைப்பு

வியாழன், 1 பிப்ரவரி, 2024

பாபாவின் தரிசனத்திற்கு ஏங்கிய ஒரு பத்ரிநாத் யோகி! - சுவாமி திவ்யானந்த சரஸ்வதி

பத்ரிநாத் யோகி ஒருவர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றியும் தியான தரிசனம் மற்றும் நேரடி தரிசனத்திற்கான வித்தியாசம் பற்றியும் தெளிவுற மொழிந்திருப்பது சுவாரஸ்யமாக இதோ...!

அது 1976. பத்ரிநாத் ஷேத்திரத்திற்கு இல்லறத் தம்பதிகள் மீரா- சஞ்ஜெய் (முழு சன்யாசப் பெயர் சஞ்ஜெயானந்த்) இருவரும் வருகிறார்கள்! அங்கே இருக்கும் சரண பாதுகா பெயருள்ள ஷேத்திர தரிசனத்திற்கு செல்கின்றனர்! அந்த இடம் பத்ரிநாத் கோவிலுக்கு மேல் 1 கிலோ மீட்டர் மலைமேல் உள்ளது! அங்கு ஒரு ஆசிரமத்தை இருவரும் பார்க்கின்றனர்! அங்கு ஒரு பீடத்தின் மேல் ஒரு மகாத்மா அமர்ந்திருக்கிறார்! அங்கு அவரை பார்க்க வந்த அவரது  பக்தர்களும் சீடர்களும் அமர்ந்திருக்கிறார்கள்! இல்லறத்துறவிகள் இருவரும் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு ஒரு மூலையில் அமர்கிறார்கள்! அங்கே நடுநாயகமாக அமர்ந்திருந்த அந்த மகாத்மாவின் பெயர் சுவாமி திவ்யானந்த சரஸ்வதி! அவர் அந்த இல்லறத்துறவிகளின் காஷாய (காவி) உடைகளைப் பார்த்து அவர்களது குருவை பற்றி விசாரிக்கிற போது...

அவர்கள் சொன்ன பதில் 

"நாங்கள் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஆசிரமத்தில் இருந்து வந்திருக்கிறோம்! நாங்கள் அவர்கள் பக்தர்கள்!" என்கிறார்கள்! எதிர்பாரா அந்த பதிலை கேட்ட திவ்யானந்த சரஸ்வதி சுவாமிகள் பாபாவை குறித்து பல கேள்விகளை கேட்க..‌அதற்கு சஞ்ஜெயும் விடை அளித்து வர...

திடீரென திவ்யானந்த சரஸ்வதி சுவாமிகள் அழ ஆரம்பித்துவிடுகிறார்... அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்... தனது கண்ணீரை துடைத்தவாறு சுவாமிகள் "இங்கே நான் எத்தனையோ வருடங்களாக இருக்கிறேன்! ஆனால் கலியுக தெய்வமான ஸ்ரீ சத்ய சாயி பாபா அவருடைய தரிசனத்திற்கு எங்களை விடுவதில்லை! அந்த அவதாரத்தின் நோக்கம் வெறும் சம்சாரிகளுக்காகவே வந்ததாம்! அதனால் எங்களுக்கு தரிசன பாக்கியம் இல்லையாம்! எப்போது அவர் தரிசன பாக்கியம் கிடைக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்!" என்கிறார்!

அதற்கு சஞ்ஜெய் "சுவாமிஜி! உங்களுக்கு தியானத்தில் பகவான் பாபாவின் தரிசனம் கிடைக்குமில்லையா?" என ஒரு நியாயமான கேள்வி கேட்கிறார்! அதற்கு சுவாமிகள் 

"தியான தரிசனத்தை விட சாட்சாத் ரூப தரிசனத்தில் மிகவும் வித்தியாசம் இருக்கும்! உருவமற்றவை உருவமுள்ளவை ஆகிவிடும்! ஆனால் பூமியில் ஸ்ரீ சத்ய சாயி அவதார தரிசனம் உருவமுள்ள உயர்வான தரிசனம்!" என்கிறார்..


பிறகு கொஞ்சம் தாமதித்து.. "ஸ்ரீ சத்ய சாயி பாபா அவதாரம்! 'ந பூதோ ந பவிஷ்யதி' மறுபடியும் வாழ்வில் இந்த அதிர்ஷ்டம் எப்போது கிடைக்குமோ?!" என்ற சிந்தனையோடு இருந்துவிட்டார்! 

(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 26,27 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 

பத்ரிநாத் யோகியே இறைவன் பாபாவின் தூல தரிசனத்திற்காக அத்தனை ஏங்கியிருக்கிறார்! ஆக பக்தர்களாகிய நாம் இப்போது  எந்த அளவிற்கு பக்தி சிரத்தையோடு அவரின் அடுத்த பிரேம அவதாரத்திற்காக காத்திருக்க வேண்டும்! ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் தூல தரிசனமே இப்போது தந்தாலும்... மண்ணில் வாழப் போகிற அவதாரம் ஸ்ரீ பிரேம சாயி அவதாரமே... ஆக அவரின் உதய வருகைக்காக இதயம் திறந்து காத்திருப்போம்!

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக