தலைப்பு

புதன், 21 ஜூன், 2023

அவதார ரகசியம் - 17.05.1968' ஆம் ஆண்டு உலக மகா நாட்டில் பாபா பகிர்ந்தவை!

பேரிறைவன் பாபாவின் ஆதிகாலத்து அரிய உரை! அதுவும் உலக மகாநாட்டில் மேடையில் பாபா பொழிந்த சத்திய மொழிகள், வாசிக்க அரிதான பொக்கிஷம், உணரப்பட வேண்டிய பேருண்மை சுவாரஸ்யமாக இதோ...

Sri Morarji Desai, Deputy Prime Minister of India with Sri Sathya Sai, First World Conference - May 16, 1968


The first World Conference of Sri Sathya Sai Seva Organisations was held at the Bharatiya Vidya Bhavan Campus in Bombay from the 16th to the 19th of May, 1968. On the 17th of May 1968, Sri Sathya Sai Baba delivered the following discourse..

இங்கு கூடியிருக்கும் அனைவரும் பக்தர்கள்! உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து கூடி இருக்கின்றனர்! 

ஆகவே ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்வதில் தவறக்கூடாது!

இங்கே இப்போது எல்லா நாடுகளில் இருக்கும் பல்வேறு விதமான நம்பிக்கை உடையவர்கள் ஆத்ம சாதகர்களாய் இங்கே இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்! 

பொதுவாக மகாநாடுகள் மகான்கள் மறைவிற்கு பின்னரே நடந்திருக்கின்றன.. ஆனால் ஒரு இறை அவதாரம் இருக்கும் போதே உலக மகாநாடு இதோ நடக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! இந்த விந்தைக்கு அடிப்படை காரணம் என்னுடைய அவதாரத்தின் உண்மைத் தன்மையே! உங்களில் 100'க்கு 99 பேர்களால் இந்த உண்மைத் தன்மையை ஆராய முடியாது! 


Sri Sathya Sai presiding over the sessions of the First World Conference

பலவிதமான தேவைகளால் இழுக்கப்பட்டு நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள்! சிலர் ஆன்மீக உயர்வை நாடியும் வந்திருக்கிறீர்கள்! சிலர் ஆர்வத்துடன் அவரவர் ஸ்தாபனங்கள் , சங்கங்கள் முன்னேற வந்திருக்கிறீர்கள்! சிலர் அன்பினாலும், பண்பினாலும் தூண்டப்பட்டும் வந்திருக்கிறீர்கள்! ஆனாலும் நீங்கள் எல்லோரும் என்னுடைய பேரவதாரத் தன்மையை ஆராய்ந்தாலும் கூட உங்களால் அதை அறிந்து கொள்ளவே முடியாது! ஆனால் இந்த அவதார உண்மைத் தன்மையிலிருந்து வெளிப்படுகிற பேரின்பத்தை நீங்களும் பூமியில் இருக்கிற பிற தேசங்களும் அடைகிற தூரத்திலேயே இருக்கின்றது! நீங்கள் அதை வெகு விரைவில் பெற முடியும்!


நான் உங்களைப் போலவே உணவு உண்டு, நடமாடுகிற போது , நானும் உங்களைப் போல் மனிதன் என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்! ஆகவே தவறான தீய‌செயல்களைச் செய்கிறீர்கள்! இது எல்லா யுகங்களிலும் மானிடத்தில் நிறைந்திருக்கிறது! நான் மனித உருவத்தில் இருப்பதால் மானிடர்கள் என்னை அறிய தவறிவிடுகிறார்கள்! 

மனிதனால் வழிபடப்படுகிற எல்லா தெய்வீக ரூபங்களை போலவே , இந்த ரூபமும் தன்னால் வகுக்கப்பட்ட கொள்கைகளை அனுஷ்டித்து வந்த மானிட உருவம்! இதுவே என்னுடைய உண்மைத் தன்மை!


நான் உங்களை வார்த்தையாலும் செயல்களாலும் குழப்பமடையச் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்! எவ்வித குழப்பமாயினும் என்னுடைய தெய்வீகத் தன்மையின் மீது உறுதியான நம்பிக்கையை உங்கள் இதய மேடையில் நீங்கள் பிரதிஷ்டை செய்தால் மாத்திரமே, நீங்கள் என்னுடைய அவதார உண்மைத் தன்மையின் தரிசனத்தைப் பெற முடியும்!

இதற்கு மாறாக ஒரு பெண்டுலம் போல் ஒரு நொடி இந்தப் பக்கமும் மறு நொடி அந்தப் பக்கமும் ஊசலாடிக் கொண்டிருந்தால் உங்களால் என்னுடைய உண்மைத் தன்மையை ஒருபோதும் உணர இயலாது! 


உங்களுடைய கவனத்தை வேறொரு திசையில் திருப்புகிறேன்! ராஜ்ய சம்பந்தமான கொடுமைகள் , அதைப் போன்ற செல்வாக்கு , அதிகாரம் முதலிய தெய்வீக சம்பந்தமற்ற காரியங்கள் நடைபெறுகிற போது இறைவனின் அவதாரங்கள் மற்ற சமயங்களில் அப்போது அங்கே உதிக்க... ஒட்டு மொத்த அதர்மமுமே தலைவணங்கி பணிந்தது! 


ஆனால் உலகியல் வாதம் செழித்து வளர்கிற இக்கலியுகத்தில் , இந்த சத்ய சாயி அவதாரத்தை எல்லோரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்! ஏனெனில் அதுவே தெய்வீகம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட தலையாய கொள்கையுடையது!இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!

இந்த சத்ய சாயி ஸ்வரூபம் தெய்வ ஸ்வரூபம்! நீங்கள் இந்த உண்மையை அறிய முடிகிறது என்றால்.. இந்த அவதார உருவம் மறைவதற்கு முன்பே அதை உணர்கிற பாக்கியசாலிகளாக நீங்கள் திகழ்கிறீர்கள்! எல்லா நாடுகளும் பாரதத்தை ஆவலுடன் வணங்கி மரியாதை செலுத்தும் சந்தர்ப்பத்தை காணவும், எனது உறுதிமொழிகளுக்கு எல்லா உலக மக்களும் செவி சாய்த்து அதன்படி நடக்கிற அரிய சந்தர்ப்பத்தைக் காணவும் உங்களுக்கு விரைவில் அந்த பாக்கியம் வழங்கப்படும்!


இன்னும் சில இருக்கின்றன... 

வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சநாதன தர்மத்தை இவ்வுலகின் மக்களிடையே வளர்க்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்! இதுவரை செய்யப்படும் பணி இதுவே தவிர, என்னுடைய இறை சக்தியினால் செய்யப்படும் அற்புதங்களை வைத்து மனிதர்களின் ஆவலைத் தூண்டி ஈர்ப்பது அல்ல...!

நான் உண்மையை நிலை நாட்டுவேன்! பொய்மையை வேருடன் களைந்தெறிவேன்!

அந்த மாபெரும் வெற்றியின் ஜோதியில் நான் உங்களுக்கு ஆனந்தத்தையும் பேரின்பத்தையும் வழங்குவேன்! 

அந்த மாபெரும் வெற்றியைத் தரும் பேரின்பத்தை அளிக்கும் இந்த சாயி ஸ்வரூபம் சக்தி ஸ்வரூபம்!


(ஆதாரம் : பிரசாந்தி | பக்கம் - 9,10,11 | தமிழாக்கம் - கே.ஏ. இராமசாமி)


கடைசி வார்த்தையிலேயே பொருள் உட்பொதிந்து இருக்கிறது! சாயி அவதாரம் என்று பாபா இதில் குறிப்பிடுவது மூன்று சாயி அவதாரங்களையுமே... அதுமட்டுமின்றி கடைசி வரியில் "சக்தி ஸ்வரூபம்" என்று நிறைவு செய்கிறார்! அந்த சக்தி ஸ்வரூபமே ஸ்ரீ பிரேம சாயி அவதாரம்! பாபா சொன்ன வெற்றி மூன்று சாயி அவதாரங்களுக்கும் பிரேம சுவாமியால் சேர்க்கப்படும் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளித்துவிட்டார்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக