தலைப்பு

புதன், 21 பிப்ரவரி, 2024

சாயி கிருஷ்ணா - புதுச்சேரி, ஸ்ரீ சத்யசாயி சேவா மையத்தின் புது விலாசம்

மணக்குள விநாயகர் அருள் பாலிக்கும் தலம். அரவிந்தர், அன்னை ஆன்மீக சுவாசம் தவழும் இடம் புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி. அங்குள்ள ஆன்மீக ஒளியில் கலந்து சுடர்விட இன்று உதிக்கிறது ஸ்ரீ சத்யசாயி சேவா மையம்... 

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் பரங்கருணையால் , யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் உதய ஞாயிறாக உதிக்கிறது ஒரு புதிய சாயி சேவா மையம். சாயி கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையம், ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ் நாடு , பிரிவின் கீழ் இயங்குகிறது.

கோபாலன் கடை என்கின்ற பெயருள்ள பொருத்தமான, அழகான பகுதியில் அமைக்கப் பட்டுள்ள இந்த வளாகத்தின் பரப்பளவு 7600 சதுர அடியாகும்.இந்த வளாகத்தில், ஒரு பெரிய ஹால், திறன் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு வசதி மற்றும் ஒரு பெரிய சமையல் கூடமும் அடங்கியுள்ளன.

350 பக்தர்கள் அமரக்கூடிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மையம் அனைத்து வகையான சேவா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்க சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது.

ஸ்ரீ சத்ய சாயி  மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு. RJ ரத்னாகர் அவர்கள், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் Dr. தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர், திரு.N. ரங்கசாமி மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள், AK சாய், J சரவணன்குமார் மற்றும் தேனி C.ஜெயகுமார் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் இன்று நடந்த இந்த விழாவில்  பங்கேற்றனர். 

வங்கக் கடல் அருகில், பொங்கும் தனி அழகான புதுச் சேரியில் உதயமாகும் இந்த புதிய ஆதவன், பகவான் புகழ் பரப்பி, பக்தர் மனம் நிரப்பி, பணிகள் சிறக்க அந்தப் பரம் பொருள் பாபாவின் அடி பணிந்து வாழ்த்துவோம். 

ஜெய் சாயிராம்.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 





1 கருத்து:

  1. ஶ்ரீசத்யசாயி யுகம் மூலமாக தரிசனம் கிடைத்ததே சந்தோஷமாக உள்ளது! நேரில் வந்து பார்த்த நிறைவு தந்தது! நன்றி பகவானுக்கு நமஸ்காரம்!

    பதிலளிநீக்கு