தலைப்பு

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ஒரு பங்காரு பக்தருக்காக விற்ற பங்காருவை மீட்ட பாபா!


இறைவன் சத்ய சாயி இதயத்திலேயே குடியிருக்கிறார்.. அவருக்காக எந்த ஆடம்பர பூஜையும் எந்தவித சடங்குகளும்.. வெளித் தேடலுக்கான பிரயாணமும் அவசியமில்லை என உணர்த்தும் உன்னத பதிவு இதோ...

நேபாளம் நாட்டின் காட்மாண்டுவில் ஒரு வயதான தம்பதியினர், சாயிபாபாவை காணச் செல்ல வேண்டுமென விரும்பியும், போதுமான பணம் இல்லாததால் போக முடியவில்லை!

முடிவில் அந்த மனைவி தங்களது பாரம்பரிய நகைகளை பான் புரோக்கரிடம் விற்று பணம் பெற்று, புறப்படலாம் என்று யோசனை கூறினாள். அப்படியே  செய்து புட்டபர்த்தி சென்றடைந்தனர். இவர்களை சாயி, நேர்காணலுக்கு அழைத்தார். சாயி அவர்களிடம், "என்னை காண்பதற்காக நகைகளை விற்று பணம் தயார் செய்துகொண்டு இவ்வளவு தூரம் வரவேண்டியதில்லை! நான் உங்கள் மனதிலேயே இருக்கிறேன்! உங்கள் வீடுகளிலும் கூட!" என்று கூறி, அவர்கள் விற்ற எல்லா நகைகளையும் கைகளில் வரவழைத்துக் கொடுத்தார். வீடு சென்ற பின் அவர்கள், அந்த நகைகளை விற்ற கடைக்காரரிடம் சென்று, தங்கள் நகைகளை மீண்டும் வாங்க விரும்புவதாக கூறினர். ஆனால் கடைக்காரர் தயங்கியவாறு, "நீங்கள் நகைகளை விற்று விட்டு சென்றதும் ஒருவர் வந்து எல்லா நகைகளையும் வாங்கிச் சென்றுவிட்டார்!" என்றார்.

ஆதாரம்: The heart of Sai by R.Lowenbeng, P 56
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 இறைவன் சத்ய சாயி தனக்காக எந்தவிதமான அடமானமும் பக்தர் செய்ய விரும்பாதவர்.. அதற்குப் பதிலாக  பக்தர்களின் பரிசுத்தமான இதயத்தையே அடமானமாகக் கேட்பவர்.. அதையே முழுமையாக ஏற்பவர். இறைவன் முன் கிலோ கணக்கில் குவியும் பிரசாந்தங்கள் .. பூமாலைகளுக்கு பதிலாக ஒரே ஒரு பாமாலை போதுமானது.. அவரின் பாதத்தில் ஒரே ஒரு துளசி சாற்றினால் போதுமானது.. எல்லாவற்றையும் விட மனமுருகி சிந்தும் ஒரே ஒரு கண்ணீர்த் துளி போதுமானது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக