தலைப்பு

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. K.V நடராஜன் IAS அவர்களின் அனுபவங்கள்!

Chief Secretary (1991-1992) and
Vigilance Commissioner (1993-1998) of Andhra Pradesh

ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலரும், சுவாமியின் நீண்ட நாள் பக்தரும் ஆன திரு K.V நடராஜன் IAS அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.

திரு. நடராஜன் அவர்கள் பணி ஓய்வுக்குப் பின் பகவானின் சேவைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர் (IAS to SAI). இவரது அனுபவங்கள் சுவையானவை.

ஒருமுறை, திரு.நடராஜன், பகவான் அவர்களை செவ்வாய்க்கிழமை அன்று சந்தித்துப் பேசினார். சுவாமி அப்போது நேற்று 'சண்டே' என்றார். இவர் 'மண்டே' ஸ்வாமி எனக் கூறினார். சுவாமி ஏன் அப்படி கூறினார் ? என்பதையும்,

1990 ஆம் ஆண்டு புது டெல்லியில் இருந்து லாகூர், புது பஸ் வழித்தடம் தொடக்க விழாவில், அப்போதைய பாரதப் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் கலந்து கொண்டு பஸ்ஸில் லாகூர் சென்றார். அப்படி அவர் சென்றபோது அப்போதைய  🇵🇰 பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் அவர்கள்  கேட்ட ஒரு கேள்விக்கு சத்ய சாய்பாபாவின் புகைப்படத்தை வாஜ்பாய் காண்பித்திருக்கிறார். அப்படி அவர் என்ன கேட்டார்..? என்பதை பற்றியும்...

டெல்லியில் அரசுத்துறையில் பணியாற்றும் தனது நண்பர் திரு வரதராஜன் அவர்களின் மனைவிக்கு சுவாமியே செய்த அறுவை சிகிச்சை பற்றியும்,

மேலும், வரதராஜன் மகன் தனக்கு வெண்பொங்கல் வேண்டும் என ஒருநாள் தனது அம்மாவிடம் கேட்டபோது, சாமான்கள் இல்லை, இன்னொரு நாள் செய்து தருகிறேன் என்று அவர் கூறிவிட்டார். இரவு சமையலறையில் பார்த்தால் பச்சரிசி, பாசிப் பருப்பு, முந்திரி, நெய் என்று அனைத்து பொருட்களையும் சுவாமி வைத்து விட்டு சென்றிருக்கிறார் என்றும் ,

மேலும் சுவாமியின் தங்கரத தரிசனம் மோட்ச தரிசனம் என பல விஷயங்களை... அழகாக கூறியுள்ளார். கேட்டு ஆனந்தம் அடையுங்கள்... 🙏



மொத்தம் இரண்டு பாகங்கள் (RST 229 & 230)
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக