தலைப்பு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

நம்மை கருவியாக கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை, சுவாமி எவரை கொண்டும் செய்து கொள்வார்!


இறைவன் சத்ய சாயி நமக்கு தரும் சேவை நம் உயிரை விட மேலானது.. அன்றாடம் வந்து போகும் சுவாசத்தை விட மேன்மையானது.. 
உலகமே தருகிறேன் இறைவன் சத்யசாயிக்கு சேவை செய்யாதே என மாயை சொன்னாலும்.. அதை துச்சம் என நினைத்து நாம் இறைவனுக்கே சேவை செய்ய வேண்டும்.. எந்த நொடியிலும் அதற்காக தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அற்புத பதிவு இதோ... 

ஒரு முறை குல்வந்த் மண்டபத்தில் பகவான் அமர்ந்திருக்கும் போது, மேலிருந்து ஒரு காய்ந்த மரக் குச்சி வந்து விழுந்தது. உடன் இருந்த கல்லூரி மாணவர் அதனை பார்த்தார். அதனை நீக்க வேண்டும், ஆனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, பேச்சாளர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எழுந்து சென்று அதனை நீக்க முயன்றால், நிகழ்ச்சிக்கு இடையூறாக அமையும் என்ற பல்வேறு எண்ண ஓட்டங்களுடன் அந்த மாணவர் அமர்ந்திருந்தார்.

அச்சமயம் எங்கிருந்தோ ஒரு சிறு குருவி அங்கு வந்தது. அக்குருவி பகவானின் அருகில் சென்று அவரை தரிசித்து, பின் அங்கு கிடந்த காய்ந்த இறகினை எடுத்து சென்றுவிட்டது. 


நிகழ்ச்சி முடிந்ததும், பகவான் அம்மாணவனை நோக்கி "பார்த்தாயா?" எனக் கேட்டார். பதிலுக்கு அம்மாணவன் ஆம் என்று கூறினார். "பின் என் பின்னால் அமர்ந்து கொண்டு என்ன செய்துகொண்டு இருந்தாய்?" என்றார். பதில் கூற முடியாமல் திகைத்து போன மாணவனிடம் பகவான் கூறினார், "ஸ்வாமியின் சேவையும் அதுபோன்றே! நேரம் காலம், செல்வம் மற்றும் வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயங்கி நின்றால், வேறு ஒருவரைக் கொண்டு அக்காரியத்தை நிறைவேற்றிக் கொள்வேன்!"
அம்மாணவன் செய்ய தயங்கிய காரியத்தை ஒரு குருவியை கொண்டு செய்து கொண்டார் பகவான்.
பகவானுக்கு அவர் காரியங்களை செய்ய நற்கருவிகளுக்கோ, ஆட்களுக்குகோ, வழிகளுக்கோ என்றும் பஞ்சமில்லை. நாம்தான் கிடைக்கும் நல் வாய்ப்புகளை நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: பகவானின் முன்னாள் கல்லூரி மாணவர் Dr. M. சாய்நாத் அவர்களின் 'செப்டம்பர் 2019, சென்னை சமர்பண்' உரையில் இருந்து.

🌻 இறைவன் சத்யசாயிக்கு பிரபஞ்சமே சிறு கருவி தான்.. அவர் எந்த ஜீவ ராசிகளையும் தன் கருவியாக மாற்றி இந்த பூமிக்கு சேவை செய்து கொள்வார்.. காரணம் இது அவர் பூமி.. மனிதனின் உயிரும் அவருடையதே.. இறைவனாகிய அவரைத் தவிர நாம் சொந்தம் கொண்டாட ஏதுமில்லை என்பதை உணர்ந்து அவரின் திவ்ய பாதார விந்தங்களில் சேவை செய்வதே முக்கியம்.. அதுவே வாழ்க்கை.. அதுவே மனித ஜென்மம் நாம் எடுத்ததற்கான ஒரே காரணம்... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக