ஸ்ரீ சத்ய சாயி வேறு அவரின் நாமம் வேறல்ல.. அதுபோல் ஸ்ரீ சத்ய சாயி வேறு அவர் விபூதி வேறல்ல... என்பதை மிகத் துல்லியமாய் .. ஆத்மார்த்தமாய் உணர்த்தும் அற்புதப் பதிவு இதோ...
1960ல் புட்டபர்த்தியில் ஒரு நாள் பாபா மாலை நேரம் ஸ்ரீ கஸ்தூரி அவர்களின் வீட்டிற்குச் சென்றார். அப்போது கஸ்தூரி அவர்களின் மகள் பத்மா அங்கு இருந்தார். பாபா கேட்டார் ,”லக்ஷ்மியின் குழந்தையைப் பார்த்தாயா?” ! பத்மா இந்தக் கேள்வியால் மிக்க ஆச்சரியம் அடைந்தார். (லட்சுமி என்பவள் அவர்களுக்கு பழக்கமான ஒரு பக்தை)
அப்போது லக்ஷ்மி பெங்களூரில் இருந்தாள். அவருக்கு 5,6 பிரசவம் ஆகியும், துரதிருஷ்டவசமாக ஒரு குழந்தை கூட தங்கவில்லை!. ஆகவே இம்முறை கர்ப்பமானதும், ஸ்வாமியின் புட்டபர்த்தி ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கு பிள்ளைப் பேறு நடக்க வேண்டுமென விரும்பினாள். முற்றிலுமாக ஸ்வாமியையே சரணடைந்தாள். குறித்திருந்த தேதிக்கு முன்பாகவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். தீவிரவாக டாக்டர் அவர்களின் கவனிப்பில் வைக்கப்பட்டாள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாள் என்ற செய்தி மட்டுமே அறிந்திருந்த பத்மாவிற்கு குழந்தை பிறந்தது தெரியாது! குழந்தை பிறந்த அற்புதத்தை/ஆச்சரியத்தை பாபாவே பத்மாவிற்கு விளக்கினார். பாபா கூறினார், ”குழந்தை 4, 5 நாட்களுக்கு முன்பாகவே வயிற்றிலேயே (கருப்பையிலேயே) இறந்து விட்டது”. மேலும் கவலையுடன் டாக்டர் "லக்ஷ்மியை பெங்களூருக்கு அனுப்பிவிடலாமா” என ஸ்வாமியிடம் உத்தரவு கேட்டார். ஆனால் ”குழந்தையை பர்த்தி ஆஸ்பத்ரியில் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நம்பிகையோடு அவள் வந்திருப்பதால் நான் திருப்ப அனுப்பமாட்டேன், நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றதும், டாக்டர் சென்று விட்டார்கள். சிறிது நேரம் கழித்து டாக்டர்.. லக்ஷ்மி குழந்தை முதிர்ச்சியடையும் முன்பாகவே (Premature) இறந்து பிறந்திருக்கிறது மேலும் குழந்தை நீலமாக உள்ளது (Blue baby) எனசெய்தி அனுப்பினார்.”நான் உடனே ஆஸ்பத்திரி சென்று, விபூதி வரவழைத்து, குழந்தையின் உடல் முழுவதும் தடவி, பிறகு குழந்தை சாதாரண நிறத்திற்கு வந்தது”, என்றார். இதைக் கூறிய பின் பத்மா அவர்களை, குழந்தையையும் பார்க்க போகுமாறு கூறினார். பாபாவே அக் குழந்தையை ”சத்ய பிரசாத்” என்று பெயரிட்டார்.
ஆதாரம்: Twameva Matha(You are my Mother) – Chapter 7 – P.82
தமிழாக்கம் : திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.
தமிழாக்கம் : திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.
🌻 தினந்தோறும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி விபூதியை பூசிக் கொள்வது என்பது அவரிடம் பாத நமஸ்காரம் வாங்குவது போல் சக்தி வாய்ந்தது. காரணம் எந்த நெற்றி அவர் பாதத்தைத் தொடுகிறோ.. அதே நெற்றியில் தான் அவரின் லீலா விபூதியும் சர்வ ரோக நிவாரண கவசமாய்ப் பதிகிறது.. நெற்றியில் பூசுவதோடு கொஞ்சம் உட்கொள்ளுங்கள்... அதுவே ஆரோக்கியத்திற்கான அஸ்திவாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக