தலைப்பு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி அதிசிறப்பு மருத்துவமனைக்கு கிடைத்த மற்றும் ஒரு அங்கீகாரம்!


உலகமே இது சாத்தியமில்லை என்று அன்று சொன்னது.. இப்படி ஒரு தூய்மை மிகு தன்னலமில்லா அதி நவீன இலவச மருத்துவமனையை ஆரம்பிப்பது கடினம் .. அதுவும் சில மாதங்களிலேயே கட்டி முடிப்பது அதைவிட கடினம் என்று வீண் வாய்ச்சொல் ஆடியது. ஆனால் இன்று நித்திய சத்தியத்தின் நிரூபணமாய் .. பகவான் சத்ய சாயியின் ஆன்மீக அதிர்வலைகளுடன் இது சாத்தியப்பட்டு வருகிறது. சாதனைப் படுத்தப்பட்டு வளர்கிறது.. அதற்கான உலக அங்கீகாரமும் கிடைக்கப் பெற்று வந்திருப்பது பரிபூரண சாயி சங்கல்பம் அன்றி வேறென்ன? 

National Accredition Board for Hospitals and Health care Providers ( NABH)   என்ற    அமைப்பு ( மருத்துவ மனைகள் மற்றும் பிற மருத்துவ சேவையாளர்களின்  தேசிய தரச் சான்றிதழ் குழு), தரமிக்க சேவைக்காக சான்றிதழ் அளிக்கும் ஒரு நிறுவனமாகும். இச் சான்றிதழ் பல் வேறுபட்ட நுண்ணிய ஆய்வுக்கு பிறகு அளிக்கப்படும் பெருமைமிக்க அங்கீகாரமாகும். அனைத்து சிகிச்சை வசதிகளும் அமையப்பெற்று, தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிலையங்களின் செயல்பாடுகள் நுணுகி ஆராயப்பட்டு அளிக்கப்படும் இந்த அங்கீகாரத்தைப் பெறும் நிறுவனங்கள் தரம் மிக்கவை என்பதில் ஐயமில்லை.


இந்த நிலையில் புட்டப்பர்த்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யசாயி அதி சிறப்பு மருத்துவ மனைக்கு இந்த அங்கீகாரம் இப்போது அளிக்கப் பட்டுள்ளது. இவ்வகை அங்கீகாரம் பெற்ற மருத்துவ மனைகளுக்கு இடையில், பகவானின் இந்த மருத்துவமனை மட்டும்தான் அனைத்து பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை முற்றிலும் இலவசமாக அளிக்கும் மருத்துவமனையாகும். NABH அமைப்பு, இது போன்று செயல்படும் உலக கூட்டமைப்பில் ஒரு அங்கத்தினர் ஆகும்.  ஆகவே இந்த சான்றிதழ் உலக அளவில் தரப்பட்ட ஒரு மரியாதை எனவும் கொள்ளலாம் இந்த அங்கீகாரம் ஒரு சாதாரண விஷயமல்ல. NABH நிர்ணயித்த 636 தரக் கட்டுப்பாடு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு மருத்துவ மனையின் ஒவ்வொரு பிரிவும் நுணுக்கமாக ஆராயப்பட்ட பின் கிடைத்ததாகும். ஆகவே இது அங்கு சேவை புரியும் அனைவரின் தன்னலமில்லா சேவைக்கு பகவானின் அனுக்கிரகத்தால் கிடைத்த அங்கீகாரமும் ஆகும். சத்யசாயி மத்திய அறக்கட்டளை இம்மருத்துவ மனையை திறம்பட நிர்வகித்து வருவது குறிப்படத்தக்கது.

LOVE ALL  SERVE ALL  - (BABA)


சாயி மகத்துவத்தின் மருத்துவப் பரிவே இந்த மருத்துவமனை.. பெங்களூரிலும் பகவான் பாபாவின் அருட்கொடை விரிந்து அங்கேயும் அதி நவீன மருத்துவமனை இயங்கி வருகிறது. நோய்களை ஆராய்ந்து மருந்து தருவது பிற மருத்துவமனை .. ஆரோக்கியத்தை ஆராய்ந்து பேரருளைத் தருவது பகவான் சத்ய சாயியின் பிரம்மாண்ட மருத்துவமனை...

ஆதாரம்: New Indian Express, August 9th 2020
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக