தலைப்பு

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ கிருஷ்ணனின் கடைசி முரளி கானம்!


தாரா என்பதன் அர்த்தம் ஊற்று ... ராதா என்பதன் அர்த்தம் ஊற்று.. மீண்டும் எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே திரும்புவது.. அதுவே பக்தி.. பக்தியே பரம் பொருளிடம் ஒடுங்குவது.. ராதா பரம  பக்தியின் ஆத்மார்த்த வடிவம்.. இறைவன் சத்ய சாயி கிருஷ்ணரிடம் ஐக்கியமான பேரருட் பிரவாக பக்தி ஊற்று பக்தை ராதா!


(ராதையின் பக்தியும், ஸ்ரீ கிருஷ்ணனின் தியாகமும் !) 

ஸ்ரீகிருஷ்ணனின் கடைசி முரளி கானம் பற்றி சுவாமியின் உரையின் தமிழாக்கம்.

 முடிவற்ற, பொங்குகின்ற, கிருஷ்ண பக்தியே ராதையின் வாழ்க்கையானது !

 ராதையின் நினைவுகள், எண்ணங்கள், கிருஷ்ணனையே சுற்றி வந்தன !

 கனவிலும், நினைவிலும், ஸ்ரீகிருஷ்ணனின் தோற்றமே எப்பொழுதும் நடனமாடிக் கொண்டிருந்தது !

 புனித யமுனா நதியின் நீலவண்ணம், கிருஷ்ணனையே அவளுக்கு நினைவூட்டியது !

 பறவையின் இனிய ஒலி, கிருஷ்ணனின் சிரிப்பையே அவளுக்கு உணர்த்தியது !

 பிருந்தாவனத்தில், கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்த இடத்திலேயே, அவளது நாட்கள் கழிந்தன!



கிருஷ்ணரும் ராதையும் ஒன்றாக தடையாய் இருந்தது மானுட வடிவமே. அதுவும் மறைந்து, அவள் கிருஷ்ணன் உடன் சீக்கிரம் கலந்து போகும் நாளும் வந்தது.

கிருஷ்ணன், பிருந்தாவனத்தில் இருந்து சென்று பல வருடங்கள் கழித்து, கோவர்த்தனகிரி பூஜைக்காக மீண்டும் பிருந்தாவனம் வந்தான்.

கிருஷ்ணன், ராதை இடம், "நான் திரும்பி உன்னிடம் வந்தேன்.",என்றான். "நீ  என்னிடமிருந்து எப்போது போனாய் ?" ,என்றாள். அதுவே பக்தி ! ராதா, கிருஷ்ணனிடம்,

"சுவாமி! எனக்காக நீங்கள் புல்லாங்குழலில் கானம் இசைக்க  வேண்டும்.",என்றாள். அவளது வேண்டுகோ ளே ஒரு கவிதை !

"வேத சாரத்தை நாதமாக மாற்றி, மதுரகானம் ஆக உன் புல்லாங்குழலில் பாடு!", என்றாள்.

கிருஷ்ணன் முரளி கானம் இசைத்தான். கானத்தின் முடிவில் அவள் கிருஷ்ணனுடன் ஐக்கியமானாள்.

ஸ்ரீகிருஷ்ணன்,  புல்லாங்குழலை உடைத்துப் போட்டான். அதன்பின் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைக்க வில்லை. ராதையின் பக்திக்காக, முரளி யையும், கானத்தையும், தியாகம் செய்தான்  ஸ்ரீகிருஷ்ணன்.

 பக்தி என்றால் ராதை ! ஸ்ரீ கிருஷ்ணரின் கடைசி முரளி கானம் இது !

தொகுத்து அளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem. 

🌻 இறைவனுக்காக தன்னையே தியாகம் செய்ய துடிப்பதும்... தானென்ற அகந்தையற்று தானற்ற நிலையில் ததும்புவதுமே பக்தியின் சுபாவம்.. அந்த பக்திக்காக .. தான் சுவாசித்த புல்லாங்குழலையே தியாகம் செய்ததே பரம்பொருள் சத்ய சாயி கிருஷ்ணனின் பிரபாவம்... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக